ஆன்டிகுவா : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி இன்று நடக்கவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்று பற்றி சிந்திக்க முடியும். அதேபோல் இந்திய அணியை பொறுத்தவரை தோல்வியடைந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.
இந்தியாவில் நடந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா அணி. அதுமட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியனாகியது ஆஸ்திரேலியா அணி. 2 ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதற்கு பழிவாங்கும் வகையில் இந்திய அணிக்கு தரமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தால், ஆஸ்திரேலிய அணிக்கு ஆப்பு வெளியேறும். அதுமட்டுல்லாமல் அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேறவிடாமல் ஆஸ்திரேலியா அணியை தோற்கடிப்பதே சிறப்பான பதிலடியாக அமையும்.
ஆனால் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது எளிதாக இருக்காது. கடந்த 2 ஐசிசி இறுதிப்போட்டியிலும் இந்திய அணிக்கு பிரச்சனையாக இருந்தது ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் தான். இரு ஐசிசி இறுதிப்போட்டியிலும் சதம் விளாசிய ட்ராவிஸ் ஹெட், ஐபிஎல் தொடரிலும் சிறந்த ஃபார்மில் இருந்தவர்.
இதனால் ட்ராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இருவரின் விக்கெட்டையும் இந்திய ணி விரைவில் கைப்பற்ற வேண்டும். பவர் பிளே ஓவர்களுக்குள் இவர்களின் விக்கெட்டை வீழ்த்தினாலே செண்ட் லூசியா மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி உறுதியாகும். ஒருவேளை பும்ராவின் ஓவரை சமாளித்து இருவரும் விளையாடினால், ஆஸ்திரேலியா அணியால் எளிதாக வெற்றிபெற முடியும்.
ட்ராவிஸ் ஹெட்டிற்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமம் உள்ளது. இதனால் அர்ஷ்தீப் சிங்கை வைத்து ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பவர் பிளேவில் பும்ராவுக்கு 2 ஓவர்களையும், அர்ஷ்தீப் சிங்கிற்கு 2 ஓவர்களையும் வீச வைக்கும் வகையில் ரோகித் சர்மா திட்டமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.