Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS பிளேயிங் லெவன்.. சுப்மன் கில் நீக்கம்.. உள்ளே வந்த ஆல் - ரவுண்டர்.. ரோஹித் இடம் மாற்றம்

மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம் ஒன்று செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய அணியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் சுப்மன் கில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வேறு ஒரு பேட்ஸ்மேன் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என சிலர் கூறி வந்தனர். ஆனால், ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் சேர்த்து இருக்கிறது இந்திய அணி நிர்வாகம். இது பற்றி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் நிகழ்வில் உறுதிப்படுத்தினார். அப்போது சுப்மன் கில் காயம் காரணமாக விளையாடவில்லை என்றும், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்றும் கூறினார்.

IND vs AUS India playing XI against australia at fourth test Shubman Gill removed

இது மட்டுமின்றி மற்றொரு அதிரடியான முடிவையும் இந்திய அணி நிர்வாகம் எடுத்து இருக்கிறது. சுப்மன் கில் நீக்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா டாப் ஆர்டரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்த்தால், ரோஹித் சர்மா துவக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது. கே எல் ராகுல் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மாற்றப்பட்ட பேட்டிங் வரிசையின் படி பார்த்தால் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். கே எல் ராகுல் மூன்றாம் வரிசையில் இறங்குவார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ்தீப் களமிறங்குவார்கள்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வெயில் அதிகமாக இருக்கிறது. அதனால், மூன்றாவது நாள் முதல் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்பதை ஊகித்தே இந்திய அணி கூடுதலாக ஒரு ஸ்பின்னரை அணியில் சேர்க்க முடிவு செய்து வாஷிங்டன் சுந்தரை சேர்த்து இருக்கிறது. அதன்படி இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீச வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலான்ட்

இந்தியா அணியின் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே எல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

Story first published: Thursday, December 26, 2024, 6:00 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+