Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய பிளேயிங் XI

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டி வரும் 19ஆம் தேதி பெர்த் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சாதாரண வீரராக தான் அணியில் உள்ளனர். பும்ரா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

India vs australia

இந்த நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணியின் தொடக்க மூன்று வீரர்களில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரோகித் சர்மா, கில் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும் விராட் கோலி மூன்றாவது வீரராகவும் விளையாட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.

இதேபோன்று நடுவரிசையில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஆகியோர் விளையாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஆகாஷ் சோப்ரா, ராகுல் விக்கெட் கீப்பராக தொடர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியா விளையாடி வந்த நிலையில் அவருக்கு காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறவில்லை.

இதனால் நிதிஷ்குமார் ரெட்டி மாற்று வீரராக இடம்பெற வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் சுழற் பந்துவீச்சாளர் ஆன அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற வேண்டும் என ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று மூன்று வேகப்பந்துவீச்சாளர் இடத்தில் ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், ஆர்ஸ்தீப் ஆகியோர் இடம் பெற வேண்டும் என்றும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆகாஷ் அணியில் குல்தீப், ஜெய்ஸ்வால் பிரசித் கிருஷ்ணா மற்றும் துருவ் ஜுரல் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் சோப்ராவின் இந்திய அணி பிளேயிங் லெவன் 1, சுப்மன் கில், 2. ரோகித் சர்மா, 3, விராட் கோலி, 4.ஸ்ரேயாஸ் ஐயர், 5. கேஎல் ராகுல், 6. நிதிஷ் குமார் ரெட்டி, 7, அக்சர் பட்டேல், 8. வாசிங்டன் சுந்தர், 9, ஹர்சித் ராணா, 10. ஆர்ஸ்தீப் சிங், 11. முகமது சிராஜ்

Story first published: Wednesday, October 15, 2025, 22:29 [IST]
Other articles published on Oct 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+