For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. கோலி டீமுக்கு நேர்ந்த அவமானம்.. அதிர்ச்சித் தகவல்!

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இருக்கிறது.

முதல் இன்னிங்க்ஸில் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 21.2 ஓவர்களில் சுருண்டது.

இந்திய டெஸ்ட் வரலாற்றில் இதுவே மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். விராட் கோலியின் அணி நம்பர் 1 அணி என பில்டப் செய்யப்பட்டு வந்த நிலையில் அதற்கு பெரும் கரும்புள்ளியாக இந்த இன்னிங்க்ஸ் அமைந்தது.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 53 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி போட்டியில் வெல்லும் என்றே பலரும் எண்ணினர்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

ஆனால், இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி மோசமாக பேட்டிங் ஆடி அதிர்ச்சி அளித்தது. முதல் 6 விக்கெட்களை 19 ரன்களுக்கு இழந்த இந்திய அணி, 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய வீரர்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடவில்லை.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

மேலும், ஒரு பேட்ஸ்மேன் கூட 10 ரன்களை தாண்டவில்லை. புஜாரா, ரஹானே என இரண்டு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். கேப்டன் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய அணி மிகக் குறைந்த ஸ்கோரான 36 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய வரலாற்றில்..

இந்திய வரலாற்றில்..

இந்திய அணியின் கிரிக்கெட் வராலற்றில் ஒரு டெஸ்ட் இன்னிங்க்ஸில் எடுக்கப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோர் இதுதான். முன்னதாக 1974இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 42 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டு இருந்தது. தற்போது அதையும் விட மோசமாக ஆடி உள்ளது

டெஸ்ட் வரலாற்றில்..

டெஸ்ட் வரலாற்றில்..

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது குறைந்த ஸ்கோர் ஆகும். நியூசிலாந்து அணி 1955இல் 26 ரன்கள் எடுத்து உள்ளதே மிகக் குறைந்த டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஸ்கோர் ஆகும். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

முதல் 6 விக்கெட்கள்

முதல் 6 விக்கெட்கள்

மேலும், முதல் 6 விக்கெட்களை வெறும் 19 ரன்களுக்கு இழந்தது இந்திய அணி. இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. முன்னதாக 1996இல் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்ததே மோசமான வீழ்ச்சியாக இருந்தது.

கோலி டீமுக்கு அவமானம்

கோலி டீமுக்கு அவமானம்

விராட் கோலி பல முறை இதுதான் இந்திய அணிகளிலேயே சிறந்த டெஸ்ட் அணி என தன் அணியை கூறி உள்ளார். அப்படிப்பட்ட அதே அணி தான் தற்போது வெறும் 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி உள்ளது. இது அவரது அணிக்கு நேர்ந்த அவமானமாக கருதப்படுகிறது.

Story first published: Saturday, December 19, 2020, 13:20 [IST]
Other articles published on Dec 19, 2020
English summary
IND vs AUS : India registered their lowest test innings score ever
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+