Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 வீரர்கள் நீக்கம்.. தமிழக வீரரை அறிமுகம் செய்த கேப்டன் கோலி.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

கான்பெர்ரா : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் நான்கு வீரர்கள் நீக்கப்பட்டனர்.

தமிழக வீரர் நடராஜன் ஒருநாள் அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். அவர் இந்திய அணிக்காக ஆடும் முதல் சர்வதேச போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி போட்டி

கடைசி போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி கான்பெர்ரா நகரில் நடைபெற்றது. ஏற்கனவே, தொடரை இழந்த நிலையில், இந்திய அணி ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கியது.

நான்கு வீரர்கள்

நான்கு வீரர்கள்

இந்திய அணியில் நான்கு வீரர்களை நீக்கி அதிரடி மாற்றம் செய்தார் கேப்டன் கோலி. மயங்க் அகர்வால், நவ்தீப் சைனி, முகமது ஷமி, சாஹல் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் ஷுப்மன் கில், ஷர்துல் தாக்குர், நடராஜன், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டனர்.

நடராஜன்

நடராஜன்

நடராஜன் ஐபிஎல் தொடரில் தன் யார்க்கர் பந்துவீச்சு மூலம் அனைவரையும் ஈர்த்த நிலையில், அவருக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு இதுவே முதல் சர்வதேச போட்டியாகும். அவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணியிலும் மூன்று முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டனர். பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க் நீக்கப்பட்டனர். கிரீன், ஸீன் அபாட், ஆஷ்டன் அகர் அணியில் வாய்ப்பு பெற்றனர். மார்னஸ் லாபுஷாக்னே துவக்க வீரராக களமிறங்கினார்.

Story first published: Wednesday, December 2, 2020, 9:38 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+