
ஆஸி. முதல் இன்னிங்க்ஸ்
சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்க்ஸில் 338 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து 131 ரன்கள் குவித்தார். லாபுஷாக்னே 91 ரன்கள் குவித்தார்.

இந்தியா பேட்டிங்
அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 26, ஷுப்மன் கில் 50 ரன்கள் குவித்தனர். அதன் பின் புஜாரா, ரஹானே பேட்டிங் செய்து வந்த நிலையில் இந்திய அணி 96 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா பெரிய அளவில் ரன் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

சரிவு
ஆனால், ரஹானே 22, ஹனுமா விஹாரி 4, ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்த நிலையில் வரிசையாக ஆட்டமிழந்தனர். புஜாரா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஸ்வின் 10, சைனி 3, பும்ரா 0, சிராஜ் 6 ரன்கள் எடுத்தனர். ஜடேஜா 28 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

244 ரன்கள்
இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 94 ரன்கள் முன்னிலை பெற்றது. பாட் கம்மின்ஸ் 4, ஜோஷ் ஹேசல்வுட் 2, மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications