Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS : முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது ஆஸி.. இந்திய அணியில் ஓபனிங் இவரா?

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் துவங்கியது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது.

இந்திய அணியில் துவக்க வீரராக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.

டாஸ் வென்ற பின்ச்

டாஸ் வென்ற பின்ச்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சிட்னியில் துவங்கியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால் டெஸ்ட் அணியின் முக்கிய துவக்க வீரர் எனும் நிலையில் ஒருநாள் அணியிலும் துவக்க வீரராக களமிறங்க உள்ளார். ரோஹித் சர்மா ஒருநாள் அணியில் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்கு பதில் மயங்க் அகர்வால் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடராஜன் இல்லை

நடராஜன் இல்லை

நவ்தீப் சைனிக்கு காயம் இருப்பதாக கூறிய நிலையில் அவர் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு மாற்று வீரராக நடராஜன் உத்தேச அணியில் சேர்க்கப்பட்டு இருந்தாலும் அவருக்கு போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி - ஷிகர் தவான், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

Story first published: Friday, November 27, 2020, 9:10 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+