
முதல் டெஸ்ட்
அடிலெய்டு மைதானத்தில் இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச உள்ளது. விராட் கோலி டாஸ் வென்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இதுவரை தோல்வி அடைந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி திட்டம்
இந்திய அணி வீரர்கள் பட்டியலை முன்தினமே பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே கொண்டு களமிறங்க உள்ளது. கூடுதல் பந்துவீச்சாளராக ஹனுமா விஹாரி, ப்ரித்வி ஷா செயல்பட வாய்ப்பு உள்ளது.

துவக்க வீரர் யார்?
ஆஸ்திரேலிய அணியில் யார் துவக்க வீரராக களமிறங்குவார்கள் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், அதிரடியாக மேத்யூ வேடை தேர்வு செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. மேத்யூ வேட் மிடில் ஆர்டரில் மட்டுமே ஆடி வந்த நிலையில் அவரை துவக்க வீரராக ஆட வைக்க உள்ளது ஆஸ்திரேலியா.

இந்திய அணி விவரம்
இந்திய அணி வீரர்கள் பட்டியல் - மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா.

ஆஸ்திரேலிய அணி விவரம்
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பட்டியல் - ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்


Click it and Unblock the Notifications