Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிக்க முடியாது.. இப்படி வேணா செய்யலாம்.. இந்தியாவுக்கு இருக்கும் ஒரே சான்ஸ் இதுதான்!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டி கடைசி நாளை எட்டி உள்ளது.

இந்திய அணிக்கு 407 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

நான்காம் நாள் இறுதியில் இந்தியா 98 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது. கடைசி நாள் அன்று 8 விக்கெட்களை கொண்டு இந்திய அணி 309 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை.

நிதான பேட்ஸ்மேன்கள்

நிதான பேட்ஸ்மேன்கள்

இந்திய அணியில் புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி போன்ற பேட்ஸ்மேன்கள் நிதானமாக ரன் எடுப்பவர்கள். ஒரே நாளில் 90 ஓவர்களில் இந்திய அணி 309 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் ஓவருக்கு 3.6 என்ற ரன் ரேட்டில் இந்தியா ரன் குவிக்க வேண்டும்.

விக்கெட்

விக்கெட்

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆட்டமிழந்த நிலையில், மிடில் ஆர்டரில் ஆடும் அந்த மூன்று வீரர்களை கொண்டு இந்த இலக்கை எட்ட முடியாது. மேலும், ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளித்து இந்தியா விக்கெட் இழக்காமல் இருப்பதே பெரிய போராட்டமாக இருக்கும்.

டிரா செய்யலாம்

டிரா செய்யலாம்

இந்த நிலையில் இந்தியா இந்தப் போட்டியை டிரா செய்வது மட்டுமே கையில் இருக்கும் ஒரே வாய்ப்பு. இது போன்ற கடைசி நாள் ஆட்டத்தில் பெரும்பாலும் உணவு இடைவேளைக்கு முன்பு வரை விக்கெட் இழக்காமல் ஆடுவதே முக்கியம்.

ஜடேஜா இல்லை

ஜடேஜா இல்லை

இந்திய அணி 2 விக்கெட்கள் இழந்த நிலையில், விக்கெட் இழக்காமல் ஆடுவதே முக்கியம். இதை உணர்ந்து புஜாரா, ரஹானே நீண்ட நேரம் களத்தில் நீடித்து நிற்க வேண்டும். ஜடேஜா காயத்தால் பேட்டிங் செய்ய வருவது கடினமே. எனவே, இந்தியா டிரா செய்வதும் கடினமான காரியம் தான்.

Story first published: Sunday, January 10, 2021, 15:29 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+