Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS 3வது மேட்ச்சில் இந்தியா ஜெயிப்பது உறுதி.. ஜெய் ஷாவை வைத்து ரசிகர்கள் கிண்டல்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது எனவும், ஜெய்ஷா அதற்கான திரைக்கதையை எழுதி விட்டார் எனவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்து வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

முன்னாள் பிசிசிஐ செயலாளரும், தற்போதைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் கொண்டுள்ளார். டிசம்பர் 1 முதல் அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பொறுப்பேற்று இருந்தார். மறுபுறம் இந்திய அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்த முடிந்துள்ளன. அதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயம் ஜெய் ஷாவும் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருக்கிறார்.

அவர் மூன்றாவது போட்டியை நேரில் காண இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக ஜெய் ஷா தான் ஐபிஎல் தொடரில் போட்டிகளின் முடிவை நிர்ணயிக்கிறார் என்ற ஒரு வேடிக்கையான சமூக வலைதளங்களில் உள்ளது. ஒவ்வொரு பரபரப்பான ஐபிஎல் போட்டிக்கு பிறகும் ஜெய் ஷா தான் அந்தப் போட்டியில் என்னென்ன நடக்க வேண்டும்? என ஸ்க்ரிப்ட் எழுதினார் என மீம்ஸ்கள் வெளியாகும்.

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்ற போதும் இது போன்ற மீம்ஸ்கள் நிறைய வெளியாகின. தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியை அவர் நேரில் பார்க்க இருப்பதால் அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் வகையில் அவர் திரைக்கதை எழுதி இருப்பார் என சில ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு உள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 அன்று துவங்க உள்ளது. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. கடந்த முறை காபாவில் இந்திய அணி ஆடிய டெஸ்ட் போட்டியில் வெற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 13, 2024, 8:38 [IST]
Other articles published on Dec 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+