For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

96 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக இப்படி.. தலைகுனிவு.. கோலி கேப்டன்சியிலேயே மோசமான இன்னிங்க்ஸ்!

அடிலெய்டு : இந்திய அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆன நிலையில் அதில் மற்றொரு மோசமான ரெக்கார்டு ஒன்றையும் செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் முடிவில் நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், இரண்டாம் இன்னிங்க்ஸில் படுமோசமாக ஆடி இருந்தது. ஒரு வீரர் கூட 10 ரன்களை தாண்டவில்லை. அதில் தான் இந்திய அணி மோசமான சாதனை செய்துள்ளது

முன்னிலை

முன்னிலை

முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. இது குறைந்த ஸ்கோர் என்ற போதும், ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்க்ஸில் 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த நிலையில், இந்திய அணி 53 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

அதிகபட்ச ரன்கள்

அதிகபட்ச ரன்கள்

இரண்டாம் இன்னிங்க்ஸில் 2௦௦ ரன்கள் எடுத்தால் கூட இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் சீட்டுக் கட்டாய் சரிந்தனர். அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 9 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

மயங்க் அகர்வாலுக்கு அடுத்து ஹனுமா விஹாரி 8 ரன்கள் எடுத்து இருந்தார். ப்ரித்வி ஷா 4, பும்ரா 2, புஜாரா 0, ரஹானே 0, கோலி 4, சாஹா 4, அஸ்வின் 0, உமேஷ் யாதவ் 4, ஷமி 1 ரன்கள் - இதுதான் இந்திய வீரர்கள் இரண்டாம் இன்னிங்க்ஸில் எடுத்த ரன்கள்.

ஒரே ஒரு முறை

ஒரே ஒரு முறை

ஒரு வீரர் கூட 10 ரன்களை தாண்டவில்லை. டெஸ்ட் வரலாற்றில் இதற்கு முன் ஒரே ஒரு முறை மட்டுமே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. 1924இல் தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 30 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இருந்தது.

96 ஆண்டுகள்

96 ஆண்டுகள்

அந்தப் போட்டியில் அதிகபட்சமாக ஹெர்பி டெய்லர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அந்தப் போட்டிக்கு பின் 96 ஆண்டுகள் கழித்து, அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணியிலும் ஒரு வீரர் கூட 10 ரன்களை தாண்டவில்லை. மயங்க் அகர்வால் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மோசமான சாதனை

மோசமான சாதனை

96 ஆண்டுகள் கழித்து ஒரு மோசமான சாதனையை செய்துள்ளது இந்திய அணி. விராட் கோலி கேப்டன்சியிலேயே இது மோசமான, மறக்க முடியாத இன்னிங்க்ஸ் ஆக அமைந்துள்ளது. இதற்கு முன் இந்திய அணி 1974இல் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே மோசமான இன்னிங்க்ஸாக இருந்தது.

Story first published: Saturday, December 19, 2020, 14:05 [IST]
Other articles published on Dec 19, 2020
English summary
IND vs AUS : Indian batsmen not even scored more than 10 runs and recorded worst innings after 96 years.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+