Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஸ்வாலுக்கு வேலை செய்யாத ஸ்னிக்கோ.. ஆகாஷ் தீப் விக்கெட்டுக்கு வேலை செய்தது எப்படி?

மெல்போர்ன்: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டின் போது ஸ்னிக்கோமீட்டரில் எந்த தடயமும் அளிக்காத போதும், 3வது நடுவர் அவுட் என்று கள நடுவரின் முடிவையே மாற்றி அறிவித்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் ஆட்டமிழந்த ஆகாஷ் தீப்-க்கு மட்டும் ஸ்னிக்கோமீட்டர் சரியாக பந்து பேட்டில் பட்டு சென்றதற்கான தடயத்தை காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்த சர்ச்சைகளும் தொடங்கிவிட்டன. பயிற்சியின் போது இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு அளிக்கப்பட்ட பிட்சிற்கும், ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்களுக்கு அளிக்கப்பட்ட பிட்சிற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. அதேபோல் இந்திய அணி வீரர்களை பத்திரிகைகளும் குறி வைத்து அட்டாக் செய்ய தொடங்கின.

ind vs aus kl rahul yashasvi jaiswal vs

தொடர்ந்து சாம் கான்ஸ்டாஸை விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்ததை ஆஸ்திரேலியா மீடியாக்கள் பெரிய விஷயமாக மாற்றின. பார்டர் கவாஸ்கர் டிராபி ஆஸ்திரேலியா அணி நினைத்ததை போல் செல்லாதது இப்படியான விஷயங்கள் நடக்க காரணமாக மாறியதா என்ற கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் கடைசி நாள் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ஸ்வால் 84 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் வீசிய ஸ்லோ பவுன்சரை விளாச முயற்சித்தார். அப்போது அந்த ஷாட் மிஸ்ஸாகிய நிலையில், பந்து நேராக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கைகளில் சென்று விழுந்தது. அப்போது கள நடுவர் அவுட் கொடுக்காத போது, ஆஸ்திரேலியா அணி தரப்பில் டிஆர்எஸ் கோரப்பட்டது. டிஆர்எஸ்-ல் ஜெய்ஸ்வாலின் பேட்டில் பட்டு பந்தின் திசையில் சிறிய மாற்றம் இருந்தது தெரிய வந்தது.

ஆனால் ஸ்னிக்கோமீட்டரில் பரிசோதனை செய்த போது, எந்த பந்து பேட்டிலோ அல்லது கிளவுஸிலோ உரசியதற்கான எந்த தடயமும் காட்டப்படவில்லை. ஆனால் திடீரென 3வது நடுவர் அவுட் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ஜெய்ஸ்வால் களத்தில் இருந்து வெளியேற மறுத்து, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன்பின் ஸ்னிக்கோமீட்டர் வேலை செய்யவில்லை என்று சில தகவல்கள் கூறப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் ஆகாஷ் தீப் விக்கெட்டின் போது, ஸ்னிக்கோமீட்டர் மிகச்சரியாக வேலை செய்தது இந்திய ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியின் போது கேஎல் ராகுலுக்கு அவுட் கொடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 30, 2024, 15:37 [IST]
Other articles published on Dec 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+