Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்க கிரிக்கெட் மேட்ச் ஆட வந்தோமா.. இல்லை டாய்லெட் கழுவ வந்தோமா? கடுப்பில் இந்திய வீரர்கள்!

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி குறித்து கடந்த ஒரு வாரமாகவே சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

அந்த டெஸ்ட் போட்டிக்காக ஹோட்டலில் தங்கி இருக்கும் இந்திய வீரர்களுக்கு கடுமையான குவாரன்டைன் விதிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஹோட்டல் ஊழியர்கள் கூட அவர்கள் இருக்கும் தளத்துக்கு அனுமதிக்கப்படுவதில்லை எனவும், அதனால் அனைத்து பணிகளையும் வீரர்களே மேற்கொள்ள வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

நான்காவது டெஸ்ட்

நான்காவது டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆனா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கே கடும் குவாரன்டைன் விதிமுறைகளை இந்திய அணிக்கு அமல்படுத்தி உள்ளது அந்த மாநில அரசு.

எங்கேயும் செல்ல முடியாது

எங்கேயும் செல்ல முடியாது

பிரிஸ்பேன் மைதானத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் இந்திய வீரர்கள் தங்கி உள்ளனர். அனைத்து வசதிகளும் கொண்ட ஹோட்டல் என்றாலும் கூட அங்கே இந்திய வீரர்கள் தங்கள் அறை இருக்கும் தளத்தை தாண்டி எங்கேயும் செல்ல முடியாது.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

அது மட்டுமன்றி இந்திய வீரர்கள் இருக்கும் அறைகளுக்கு ஊழியர்கள் யாரும் வர அனுமதி இல்லை. அவர்களுக்கான உணவு அருகே இருக்கும் இந்திய உணவகத்தில் இருந்து வருகிறது. அதை தளத்தில் வைத்து விட்டு சென்று விடுவார்கள் என கூறப்படுகிறது.

கழிவறை

கழிவறை

மேலும், அறையை சுத்தம் செய்யும் வேலை, கழிவறையை சுத்தம் செய்யும் வேலையை தாங்களே செய்து வருவதாக இந்திய வீரர் ஒருவர் புலம்பி இருக்கிறார். எனவே, இது ஒரு வசதியான சிறை போன்றே இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

இரக்கமே இல்லை

இரக்கமே இல்லை

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை மோசமாக நடத்தியது ஆஸ்திரேலிய அணி. காயம் ஏற்பட்ட வீரர்களிடம் கூட இரக்கம் காட்டாமல் நடந்து கொண்டார்கள். தற்போது கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பும் இந்திய வீரர்களை குறி வைத்து செயல்பட்டு வருகிறது ஆஸ்திரேலியா.

Story first published: Wednesday, January 13, 2021, 13:13 [IST]
Other articles published on Jan 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+