Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேட்ச் எப்படி நடக்குதுன்னு பார்க்குறோம்.. ஆஸி. கெடுபிடி.. கடுப்பான இந்திய வீரர்கள்.. அதிரடி முடிவு!

சிட்னி : இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.

இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றனர். அங்கே இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரச்சனை ஏற்படவில்லை.

தற்போது அங்கே மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணிக்கு கடுமையான லாக்டவுன் பின்பற்ற வேண்டும் என தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றவது போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது. அங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்

எனினும், சிட்னியில் போட்டி திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. அடுத்ததாக பிரிஸ்பேன் நகரில் நான்காவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. அங்கேயும் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு செல்லும் போது இந்திய வீரர்கள் கடுமையான லாக்டவுன் விதிகளை பின்பற்ற வேண்டும் என கூறப்படுகிறது.

கடுமையான விதிகள்

கடுமையான விதிகள்

கடந்த ஆறு மாதமாக இந்திய வீரர்கள் பயோ பபுள் விதிகளை பின்பற்றி பாதுகாப்பு வளையத்தில் இருந்து வருகின்றனர். அதிலும் ஐபிஎல் தொடருக்கு முன் 14 நாட்களும், ஆஸ்திரேலிய தொடருக்கு முன் 14 நாட்களும் கடுமையான குவாரன்டைனில் இருந்துள்ளனர்.

ஆட மாட்டோம்

ஆட மாட்டோம்

இந்த நிலையில், அவர்களை மீண்டும் கடுமையான விதிகளை பின்பற்றுமாறு கூற உள்ளது ஆஸ்திரேலிய அரசு. இந்திய வீரர்கள் சிலர் அப்படி கட்டுப்பாடுகள் விதித்தால் நான்காவது டெஸ்டில் ஆடப் போவதில்லை என முடிவு எடுத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

மெல்போர்ன் நகரில் ரோஹித் சர்மா உள்ளிட்ட ஐந்து இந்திய வீரர்கள் உணவகத்திற்கு சென்ற விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகள் குறித்த செய்தியும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஐந்து வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

Story first published: Sunday, January 3, 2021, 11:09 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+