Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எத்தனை தடவை தான் சொல்றது.. எதற்கும் பணியாத கோலி.. சாட்டையை சுழற்றிய ஐசிசி!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் முடிவில் இந்திய அணி வீரர்களுக்கு 20 சதவீதம் அபராதம் விதித்து இருக்கிறது ஐசிசி.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன ஒருநாள் தொடரில் இந்தியா 1 - 2 என தோல்வி அடைந்த நிலையில், டி20 தொடரில் பங்கேற்றது.

டி20 தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் வென்றது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை.

ஆஸி பேட்டிங்

ஆஸி பேட்டிங்

மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. மேத்யூ வேட் 80, மேக்ஸ்வெல் 54 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.

அதிக நேரம்

அதிக நேரம்

ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை தடுக்க இந்திய அணி கேப்டன் விராட் கோலி திட்டமிடலுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார். பீல்டிங் நிறுத்துவது, பந்துவீச்சை மாற்றுவது என பல வகைகளில் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டார்.

தோல்வி

தோல்வி

இதை அடுத்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இந்திய அணி ஒரு ஓவர் குறைவாகவே வீசி இருந்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. தோல்வி அடைந்தாலும் இந்திய அணி டி20 தொடரை 2 - 1 என கைப்பற்றி இருந்தது.

ஒப்புக் கொண்ட கோலி

ஒப்புக் கொண்ட கோலி

போட்டியின் முடிவில் மேட்ச் ரெப்ரீ டேவிட் பூன்-இடம் ஐசிசி விதிப்படி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீச தாமதம் ஆனதை ஒப்புக் கொண்டார் விராட் கோலி. இதை அடுத்து விசாரணை இன்றி இந்திய அணி வீரர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதத்தை அபராதமாக விதித்தது ஐசிசி.

சாட்டையை சுழற்றிய ஐசிசி

சாட்டையை சுழற்றிய ஐசிசி

இதற்கு முன்னதாக முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி ஓவர்களை வீசி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அப்போதும் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக இதே ஆண்டின் பிப்ரவரி மாதம் நியூசிலாந்து டி20 தொடரிலும் ஒரு போட்டியில் 40 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டது.

கோலி செய்யும் தவறு

கோலி செய்யும் தவறு

எதிரணி அதிரடியாக ரன் குவிக்கும் போது கேப்டன் விராட் கோலி எப்போதும் ஓவர்களை வீசி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். கேப்டன் செய்யும் தவறுக்கு மற்ற வீரர்களும் தங்கள் சம்பளத்தை இழக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Story first published: Wednesday, December 9, 2020, 17:01 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+