Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களை பார்த்தா எப்படி தெரியுது? எல்லை மீறிய ஆஸி. உச்சகட்ட வெறுப்பில் இருக்கும் இந்திய வீரர்கள்!

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு மற்றும் அந்நாட்டு ஊடகங்கள் இந்திய வீரர்களை மோசமான வகையில் சித்தரித்து வருகின்றன.

இந்திய வீரர்கள் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதவர்கள், அந்த விதிகளை கண்டால் அவர்களுக்கு பிடிக்காது என்பது போல தொடர்ந்து சித்தரித்து செய்திகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இது சில இந்திய வீரர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மறுப்பா?

மறுப்பா?

பிரிஸ்பேன் டெஸ்டில் ஆட மாட்டோம் என இந்திய அணியில் யாரும் கூறவில்லை. ஆனாலும், அப்படி இந்திய வீரர்கள் கூறுவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி அதை ஊதிப் பெரிதாக்கி இருக்கிறார்கள். போட்டியில் வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா இவ்வாறு செய்வதாக பரபரப்பு எழுந்துள்ளது.

வீடியோ

வீடியோ

இது எல்லாமே ரோஹித் சர்மாவை குறி வைத்துத் தான் துவங்கியது. ரோஹித், பண்ட், ஷுப்மன் கில், ப்ரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்னில் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கே அவர்கள் உள்ளே அமர்ந்து உணவு அருந்தியதை ஒரு ரசிகர் வீடியோ எடுத்து பதிவிட்டார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

பயோ பபுள் விதிமுறைப்படி இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் உணவகத்தில் வெளியே அமர்ந்து கொள்ளலாம். ஆனால், உள்ளே செல்லக் கூடாது. அன்று நீண்ட நேரம் மழை பெய்ததால் அவர்கள் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

அந்த வீடியோவை வைத்து ஆஸ்திரேலிய ஊடகங்கள், இந்திய வீரர்கள் விதிகளை மீறியதாக பரபரப்பை கிளப்பியது. இதை எளிதாக முடிக்காமல் விசாரணை செய்து நேரத்தை நீட்டித்து வருகிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு.

விமர்சனம்

விமர்சனம்

இதை அடுத்து இந்திய வீரர்கள் நான்காவது டெஸ்ட் நடைபெற உள்ள பிரிஸ்பேன் நகரில் கடுமையான லாக்டவுன் விதிகள் அமலில் இருப்பதால் அறையை விட்டே வெளியில் வர முடியாது என்பதால் அந்த விதிகளை தளர்த்த வேண்டும் என கோருவதாக வந்த அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை வைத்தும் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்திய வீரர்கள் மனநிலை

இந்திய வீரர்கள் மனநிலை

தாங்கள் விதிகளை பின்பற்ற மறுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஆஸ்திரேலியா முயல்வது இந்திய வீரர்களை எரிச்சலில் ஆழ்த்தி உள்ளது. இந்த சர்ச்சைகளை தொடர் முடியும் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் நீட்டிக்கக் கூடும்.

Story first published: Monday, January 4, 2021, 14:27 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+