Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்ப, திரும்ப நாங்க இதை தான் சொல்கிறோம்.. இனியாவது கம்பீர் கேட்பாரா? EX சிஎஸ்கே வீரர் கருத்து

ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆர்ஸ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆனால் முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் சேர்க்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சிஎஸ்கே வீரர் இர்ஃபான் பதான், ஆர்ஸ்தீப் சிங்கை நீங்கள் அணியில் சேர்த்தவுடன் தம் ஏன் அணியில் இருக்க வேண்டும் என்பதை அவர் தனது பந்து வீச்சு மூலம் காட்டிவிட்டார்.

Ind vs Aus

இதுவரை பவர் பிளேவில் மட்டும் அவர் 45 விக்கெட் வைத்திருக்கிறார். ஆர்ஸ்தீப் சிங் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து கணக்கிட்டால் புதிய பந்தை பயன்படுத்தி பவர் பிளேவில் அவரை விட யாரும் அதிக விக்கெட்டை எடுத்ததில்லை என தெரிய வருகிறது.

இதனால் தான் நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். ஆர்ஸ்தீப் சிங் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். நாங்கள் ஏன் சொல்கிறோம் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை காண்பித்து விட்டார். ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஷ் ஆகியோரின் விக்கெட்டை அவர் வீழ்த்திய விதத்தை பாருங்கள்.

இதே போன்று இறுதி கட்டத்திலும் பழைய பந்தை பயன்படுத்தி மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். புதிய பந்தில் கூட யார் வேண்டுமானாலும் விக்கெட்டை எடுத்துவிடலாம். ஆனால் பழைய பந்தில் பந்து வீசுவது என்பது மிகவும் சவாலான விஷயம். இன்றைய ஆட்டத்தில் கூட அவர் முதல் இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடைசி இரண்டு ஓவர்களில் 23 ரன்களை அவர் விட்டுக் கொடுத்து இருக்கிறார். ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். எந்த வீரராக இருந்தாலும் சரி அவர் நல்ல ஒரு பவுலராக விளங்குகிறார். சிறப்பான முறையில் யாக்கர்களை வீசுகிறார். இதுதான் அவருடைய பலம். நான் ஏன் இதை சவாலானது என்று கூறுகிறேன் என்றால் யாக்கர் பந்துகள் வீசும் போது சில நேரம் அது பௌண்டரிக்கு கூட செல்லும்.

இதனால் கூடுதலாக அவர் சில ரன்களை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். ஆனால் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு முழு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட நிலையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தற்போது அவர் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்.

இப்படி ஒரு செயல்பாட்டை கொடுத்த பின்பு அவரை அணியை விட்டு நீக்கி வைப்பது என்பது காரணமே இல்லாத விஷயமாகும்.டி20 கிரிக்கெட்டில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களது ஆங்கில் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

Story first published: Sunday, November 2, 2025, 23:30 [IST]
Other articles published on Nov 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+