Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: சிக்சர் அடித்தால் இனி ரூல்ஸை மாற்றனும்.. இர்பான் பதான் கருத்து

மும்பை: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை வியாழக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1:45 மணிக்கு நடைபெறுகிறது இந்த போட்டி குறித்து சமூக வலைத்தளத்தில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் டி20 கிரிக்கெட்டில் விதிகளை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் மூன்றாவது டி20 போட்டியில் அக்சர் பட்டேல் வீசிய பந்தை டிம் டேவிட் அடித்தார். அந்த பந்து 129 மீட்டர் தூரம் சிக்ஸருக்கு சென்றது. இதில் தான் விதியை மாற்ற வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார்.

Irfan Pathan

நானும் அதே தான் சொல்லி வருகின்றேன். 100 மீட்டர் தூரத்தை தாண்டி சிக்ஸர் அடித்தால் பேட்ஸ்மேனுக்கு எட்ட அல்லது 10 ரன்களோ வழங்க வேண்டும் .அது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கின்றேன். கிரிக்கெட்டில் எப்போதுமே விதிகள் மாறிக் கொண்டுதான் இருக்கின்றது.

பவர் பிளேவில் விதிகள் மாறி இருக்கின்றது. சிவப்பு பந்து, வெள்ளை பந்து புது பந்து என அனைத்திலும் விதிகள் மாறி இருக்கிறது. ஏன் ஒரு நாள் கிரிக்கெட் 60 ஓவர்ல இருந்து 50 ஓவராக மாற்றப்பட்டது. அதன் பின்பு டி20 கிரிக்கெட் வந்திருக்கிறது. தற்போது பத்து ஓவர் கிரிக்கெட் கூட விளையாடி இருக்கிறேன். எனவே கிரிக்கெட்டில் புதிய விதிகளை நாம் வகுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இது போல் 100 மீட்டர் தாண்டி ஒரு பேட்ஸ்மேன் அடித்து 8 அல்லது 10 ரன்கள் கொடுத்தால் இது மிகப் பெரிய தாக்கத்தை டி20 கிரிக்கெட்டில் ஏற்படுத்தும் அனைத்து வீரர்களும் பெரிய சிக்சர் அடிக்க முயற்சி செய்வார்கள். இது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் நல்லது எண்றேன் மற்ற கிரிக்கெட் பற்றி எனக்கு தெரியாது.

ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்த விதியை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பெரிய ஷார்ட் அடிக்கும் பேட்ஸ்மேன்கள் மேலும் வளருவார்கள் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். இதேபோன்று நான்காவது டி20 போட்டியில் ஹேசல்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இல்லாதது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 5, 2025, 22:57 [IST]
Other articles published on Nov 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+