For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதலில் ஸ்ரேயாஸ் அடுத்து கோலி.. இளம் வீரரின் இடத்தை தட்டிப் பறித்த சீனியர்கள்.. என்ன நடந்தது?

பெங்களூர் : இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் நன்றாக ரன் குவித்து தன்னை நிரூபித்த போதும் அணியில் நிரந்தர இடமின்றி தவித்து வருகிறார்.

முதலில் ஸ்ரேயாஸ் ஐயரால் ஒருநாள் அணியில் தன் வாய்ப்பை இழந்த இஷான் கிஷன், டி20 அணியிலாவது இடம் பெறலாம் என நினைக்கும் போது விராட் கோலி அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் தகவல் அவரை மேலும் விரக்தியில் ஆழ்த்தி உள்ளது.

முதலில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றார் இஷான் கிஷன். அப்போது காயத்தில் இருந்து அணிக்கு திரும்பி இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் வலியில் இருந்ததால் முதல் சில போட்டிகளில் மிடில் ஆர்டரில் வாய்ப்பு பெற்றார் இஷான் கிஷன்.

IND vs AUS : Ishan Kishan may never get chance in T20 team because of Virat Kohli

துவக்க வீரராக அறியப்பட்டாலும், மிடில் ஆர்டர் வீரராக தனக்கு அளிக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து அசத்தினார். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பிய உடன் எந்த காரணமும் இன்றி நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2023 உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் காய்ச்சலால் முதல் இரண்டு போட்டிகளில் இடம் பெறாத நிலையில் இஷான் கிஷன் துவக்க வீரராக ஆடினார். முதல் போட்டியில் டக் அவுட் ஆனாலும், இரண்டாவது போட்டியில் 47 ரன்கள் எடுத்தார். ஆனால், சுப்மன் கில் அணிக்கு திரும்பிய உடன் நீக்கப்பட்டார் இஷான் கிஷன்.

உலகக்கோப்பை தொடர் முடிந்த பின் ஆஸ்திரேலிய டி20 தொடரில் இதுவரை அவர் ஆடி இருக்காத மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக வாய்ப்பு பெற்றார். மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் அடித்தார். ஆனால், இப்போதும் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பிய உடன் நீக்கப்பட்டார்.

இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என முத்திரை குத்தப்பட்டு விட்டதால் அணியில் கேஎல் ராகுல் இருந்தால் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. டி20 அணியில் ஆறாம் வரிசை பேட்ஸ்மேனுக்கான இடம் மட்டுமே உள்ளது. அதிலும் அதிரடி வீரர் தேவை என விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவை அணியில் சேர்த்து உள்ளனர். அவர் அளவுக்கு இஷான் கிஷன் அதிரடியாக ரன் சேர்க்க மாட்டார் என கருதியதால் இந்த மாற்றம் நடந்துள்ளது.

இந்த சம்பவங்களுக்கு மத்தியில் அடுத்து விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடரின் போது அணிக்கு திரும்பக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே, அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜிதேஷ் சர்மா என ஆட்கள் அவருக்கு போட்டியாக இருக்க விராட் கோலி அணிக்கு திரும்பினால் இஷான் கிஷனுக்கு பேட்டிங் வரிசையில் இடமே இருக்காது.

Story first published: Sunday, December 3, 2023, 14:55 [IST]
Other articles published on Dec 3, 2023
English summary
IND vs AUS : Ishan Kishan may never get chance in T20 team because of Shreyas Iyer and Virat Kohli.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+