Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க.. பொங்கி எழுந்த இளம் வீரர்.. கோலி இடத்துக்கு சிக்கல்

திருவனந்தபுரம் : இந்திய அணியில் தொடர்ந்து சரியான வாய்ப்பின்றி புறக்கணிக்கப்பட்டு வரும் இளம் வீரர் இஷான் கிஷன் டி20 அணியில் விராட் கோலியின் இடத்தை குறி வைத்து இருக்கிறார்.

இந்திய ஒருநாள் அணியில் துவக்க வீரராகவும், மிடில் ஆர்டர் வீரராகவும் தன்னை நிரூபித்து இருக்கிறார். ஒருநாள் அணியில் இரட்டை சதம் கூட அடித்து விட்டார். ஆனாலும், அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் நடந்த 2023 உலகக்கோப்பை தொடரில் மாற்று வீரராக இருந்த இஷான் கிஷன் சுப்மன் கில் இடம் பெறாத முதல் இரண்டு போட்டிகளில் அணியில் இடம் பெற்றார். ஆனால், சுப்மன் கில் அணிக்கு திரும்பியதை அடுத்து நீக்கப்பட்டார். அதனால் விரக்தியில் இருந்த அவருக்கு டி20 அணியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

IND vs AUS : Ishan Kishan will replace Virat Kohli in Indian T20 team

இந்த நிலையில், அடுத்து 2024 டி20 உலகக்கோப்பை வர உள்ள நிலையில் தற்போது டி20 அணியில் மூன்றாம் வரிசை வீரராக தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கிறார் இஷான் கிஷன். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சரியான வீரர்கள் இல்லாத நிலையில் ஓரளவு சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட இஷான் கிஷனை மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறக்கினார் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன்.

இஷான் கிஷன் இதுவரை நடந்த இரண்டு டி20 போட்டிகளிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார். மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் எப்படி ஆட வேண்டுமோ, அதே போல நிதானமாக ஆடத் துவங்கி பின் அதிரடிக்கு மாறி வருகிறார் இஷான் கிஷன். அவர் ஆடத் துவங்கும் போது முதல் 15 - 20 பந்துகளில் அவர் ஸ்ட்ரைக் ரேட் நூறுக்கும் குறைவாக உள்ளது. ஆனால் அடுத்த 20 பந்துகளில் அவர் ஸ்ட்ரைக் ரேட் 130 - 140ஐ எட்டி விடுகிறது.

அவரது பேட்டிங் அணுகுமுறையால், அவரை சுற்றி பிற அதிரடி பேட்ஸ்மேன்களான துவக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட், நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்கள் இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனான விராட் கோலி இதே பணியை திறம்பட செய்து வந்தார். தற்போது டி20 அணியில் அதே வேலையை செய்யத் துவங்கி இருக்கிறார் இஷான் கிஷன்.

இந்திய அணியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு அது விராட் கோலி தான் என அனைவரும் சொல்வார்கள். ஆனால், டி20 அணியில் அந்த நிலைமை விரைவில் மாறப் போகிறது. இஷான் கிஷன் அதற்கான அடித்தளத்தை போட்டு இருக்கிறார். அடுத்த மூன்று போட்டிகளிலும் அவர் இதே போல சிறப்பாக ஆடினால் அவர் டி20 அணியில் நிரந்தர இடத்தை பிடித்து விடுவார்.

Story first published: Monday, November 27, 2023, 21:54 [IST]
Other articles published on Nov 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+