Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த பையனுக்கு பயமே கிடையாது.. உங்க பந்தில் கொஞ்சம் கூட வேகமில்லை ஸ்டார்க்.. ஜெய்ஸ்வால் பதிலடி!

பெர்த்: ஆஸ்திரேலியா அணியின் சீனியர் வீரரான மிட்சல் ஸ்டார்க் மற்றும் இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் இடையில் நடந்த விவாதம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பந்திற்கு பின்னரும் ஸ்டார்க் முறைத்து பார்த்து கொண்டிருந்த போது, உங்கள் பந்தில் கொஞ்சமும் வேகமில்லை என்று ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது, ஸ்லெட்ஜிங்கிற்கும் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை ஸ்லெட்ஜிங் என்பது விளையாட்டின் முக்கியமான அங்கம். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கூட இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய போது, சில ஸ்லெட்ஜிங் செயல்பாடுகள் காணப்பட்டன.

ind vs aus border gavaskar trophy india vs australia test match cricket yashasvi jaiswal vs

லபுஷேன், கம்மின்ஸ், ஸ்டார்க் உள்ளிட்டோர் இந்திய அணி அவ்வளவு தான் என்ற உடல்மொழியுடன் சிரித்து நக்கல் செய்தனர். ஆனால் அதற்கு இந்திய அணியின் கேப்டன் பும்ரா தனது பவுலிங் மூலம் பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியா வீரர்களின் திமிரை அடக்கினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

முதல் இன்னிங்ஸ் போல் அல்லாமல் இரு வீரர்களும் அட்டகாசமான டிஃபென்ஸை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் புதிய பந்தில் ஆஸ்திரேலியா அணி பவுலர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதைக்க ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சில வார்த்தைகளை பேச தொடங்கினர்.

ஆனால் ஜெய்ஸ்வால் திடீரென மிட்சல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் பந்தில் சில பவுண்டரிகளை விளாசினார். இதனால் டென்ஷனான ஸ்டார்க், ஒவ்வொரு முறை பவுலிங் செய்து முடித்த போதும், ஜெய்ஸ்வாலை பார்த்து முறைத்து பார்ப்பதை வழக்கமாக்கினார். ஒரு சில பந்துகளை எதிர்கொண்ட பின் ஜெய்ஸ்வால் உடனடியாக ஸ்டார்க்கை பார்த்து, உங்கள் பந்தில் கொஞ்சமும் வேகமில்லை என்று பதிலடி கொடுத்தார்.

இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி நேரலையிலேயே ஒளிபரப்பாகியது. ஆஸ்திரேலியா மண்ணிலேயே ஸ்டார்க் பந்தில் வேகமில்லை என்று ஜெய்ஸ்வால் பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஹர்சித் ராணாவின் பவுலிங்கை எதிர்கொண்ட ஸ்டார்க், உன்னை விட நான் கூடுதல் வேகமாக பவுலிங் செய்வேன்.. அதேபோல் ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகையை கைப்பற்றினேன் என்று கூறி இருந்தார்.

தற்போது அடுத்த சில மணி நேரங்களிலேயே மிட்சல் ஸ்டார்க்கின் பந்தில் வேகம் குறைவாக இருப்பதாக ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்திருப்பது இந்திய ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனால் 22 வயதிலேயே ஆஸ்திரேலியா மண்ணில் அரைசதம் அடித்துள்ள ஜெய்ஸ்வாலுக்கு கொஞ்சம் கூட பயமில்லை என்று பாராட்டி வருகின்றனர்.

Story first published: Saturday, November 23, 2024, 14:28 [IST]
Other articles published on Nov 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+