Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடும் வலி.. என்ன நடந்தாலும் சரி.. ஓங்கி அடித்த ஜடேஜா.. மிரண்டு போன ஆஸி. வீரர்கள்.. தரமான சம்பவம்!

கான்பெர்ரா: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டி20 போட்டியில் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் ஜடேஜா கடும் வலியுடன் ஆடி இந்திய அணியை 150 ரன்களை கடக்கச் செய்தார்.

கேஎல் ராகுல் 51 ரன்கள் அடித்து அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரின் முதல் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது, இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

சஞ்சு சாம்சன் அதிரடி

சஞ்சு சாம்சன் அதிரடி

இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - ஷிகர் தவான் துவக்கம் அளித்தனர். தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆடி 15 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார்.

அடித்தளம் அமைத்த ராகுல்

அடித்தளம் அமைத்த ராகுல்

மனிஷ் பாண்டே 2 ரன்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். விக்கெட்கள் சரிந்த போதும் துவக்க வீரர் கேஎல் ராகுல் 51 ரன்கள் குவித்து அடித்தளம் அமைத்தார். ஜடேஜா கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி மிரள வைத்தார்.

காயம்

காயம்

19வது ஓவரின் மூன்றாவது பந்துக்கு பின் அவர் காலில் தசைப்பிடிப்பால் வலியில் துடித்தார். எனினும், அந்த வலியுடன் அடுத்த மூன்று பந்துகளில் ஒரு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் இந்தியா 23 ரன்கள் சேர்த்தது.

ஹெல்மட்டில் தாக்கிய பந்து

ஹெல்மட்டில் தாக்கிய பந்து

கடைசி ஓவரில் இரண்டாவது பந்தில் அவர் ஹெல்மட்டில் பந்து தாக்கியது. அதையும் சமாளித்த ஜடேஜா அந்த ஓவரில் இரண்டு ஃபோர் அடித்தார். இந்தியா 18 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போது 150 ரன்களை தாண்டுவதே கடினம் என்ற எண்ணம் நிலவியது.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

அதை உடைத்து ஜடேஜா தன் அதிரடி ஆட்டத்தால் 161 ரன்களை எட்டச் செய்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

மிரண்ட ஆஸ்திரேலியா

மிரண்ட ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா 18வது ஓவர் வரை போட்டியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், கடைசி ஒரு ஓவர்களில் போட்டியை மாற்றினார் ஜடேஜா. அவர் மீண்டும் ஒரு முறை சரியாக பினிஷிங் செய்து இந்திய அணியை காப்பாற்றி உள்ளார்.

Story first published: Friday, December 4, 2020, 16:42 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+