Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: செஞ்சுரி அடிக்கும் முன் ஜெய்ஸ்வால் செய்த சம்பவம்.. அரண்டு போன ஆஸ்திரேலியா.. 4வது சதம்

பெர்த்: இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி இருந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 205 பந்துகளில் சதம் அடித்தார். அவர் சிக்ஸ் அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார்.

அதை எதிர்பார்க்காத ஆஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சதம் அடிக்க விடாமல் செய்து, ஆட்டம் இழக்கச் செய்யலாம் என ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக அழுத்தம் அளித்து வந்தனர். பொதுவாக சதம் அடிக்கும் முன் அந்த பேட்ஸ்மேனுக்கு பதற்றம் இருக்கும். அதை வைத்து ஜெய்ஸ்வாலை வீழ்த்தலாம் என ஆஸ்திரேலிய வீரர்கள் திட்டமிட்டனர்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

ஆனால், அதற்கு மாறாக அவர் 95 ரன்கள் அடித்து இருந்த நிலையில் சிக்ஸ் அடித்து தனது நான்காவது டெஸ்ட் போட்டி சதத்தை நிறைவு செய்தார். ஜோஷ் ஹேசல்வுட் வீசிய 62வது ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்ஸ் அடித்து சதம் அடித்து இருந்தார் ஜெய்ஸ்வால்.

கே எல் ராகுல் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 201 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் இழந்து ஆடி வருகிறது. பெர்த் மைதானத்தில் சதம் அடிப்பது கடினம் என கூறப்படும் நிலையில், ஜெய்ஸ்வால் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்தார். 23 வயதுக்குள் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார். ஜெய்ஸ்வாலுக்கு தற்போது 22 வயது ஆகிறது.

23 வயதுக்குள் அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்கள் -

சச்சின் டெண்டுல்கர் - 8 சதங்கள்
ரவி சாஸ்திரி - 5 சதங்கள்
சுனில் கவாஸ்கர் - 4 சதங்கள்
வினோத் காம்ப்ளி - 4 சதங்கள்
ஜெய்ஸ்வால் - 4 சதங்கள்

23 வயதுக்குள் ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்கள் -

1971 இல் சுனில் கவாஸ்கர் - 4 சதங்கள்
1993 இல் வினோத் காம்ப்ளி - 4 சதங்கள்
1984 இல் ரவி சாஸ்திரி - 3 சதங்கள்
1992 இல் சச்சின் டெண்டுல்கர் - 3 சதங்கள்
2024 இல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 3 சதங்கள்

Story first published: Sunday, November 24, 2024, 8:31 [IST]
Other articles published on Nov 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+