Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் தொடவே முடியாது.. 6 விக்கெட்டுகள்.. பாக்ஸிங் டே டெஸ்டில் பும்ரா படைக்கப் போகும் மெகா சாதனைகள்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஏராளமான சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி நடக்கவுள்ளது. மெல்போர்னில் நடக்கவுள்ள இந்த பாக்ஸிங் டெஸ்ட் போட்டி ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருப்பதால், இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு, பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கும்.

ind vs aus bumrah kapil dev

இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ராவை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். ஏனென்ரால் இதுவரை நடந்த 3 போட்டிகளில் மட்டும் ஜஸ்பிரிட் பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் பும்ராவை அழுத்தத்திற்கு தள்ள என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து வருகின்றனர்.

இதனிடையே மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஏராளமான சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 194 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அடுத்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.

அதேபோல் ஒட்டுமொத்தமாக விரைவாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பும்ரா பிடிப்பார். இந்தப் பட்டியலில் 37 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல் இந்த டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைப்பார்.

1991-92ல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் கபில் தேவ் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை கபில் தேவ் பெற்றார். இந்த சாதனை 33 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கும் நிலையில், பும்ராவுக்கு அந்த சாதனையை படைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

Story first published: Saturday, December 21, 2024, 21:00 [IST]
Other articles published on Dec 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+