Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

30 வயதில் ஐபிஎல் மூலம் கண்டு எடுக்கப்பட்ட தங்கம்.. பேட்டிங்கின் பலமே அது தான்

மும்பை : ஐபிஎல் தொடர் மூலம் பல வீரர்கள் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்று இருக்கிறார்கள். சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் எல்லாம் ஐபிஎல் தொடர் இல்லை என்றால் இந்திய அணி பக்கமே வந்திருக்க முடியாது.

இந்த நிலையில், பஞ்சாப் அணியில் இடம்பெற்று, பின்னர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் ஜித்தேஷ் சர்மா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் சயும் போது களத்திற்கு வந்த ஜித்தேஷ், தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்.

Ind vs aus - Jitesh sharma batting technique explained

19 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். ஜித்தேஷ் சர்மாவின் பேட்டிங் திறன் குறித்து பேசிய கிரிக்கெட் விமர்சகர் ரிச்சர்ட்ஸ், ஜித்தேஷ் சர்மாவின் பேட் ஸ்விங் ரொம்ப பெருசு. பின், தோள்பட்டை பக்கம் இருந்து ஆரம்பிக்கும் பேட் ஸ்விங், மீண்டும் முன் தோள்பட்டை வழியாக பழைய இடத்திற்கு போய் முடியும்.

அதாவது அவருடைய பேட் பந்தை அடிக்கும் பொழுது, காற்றில் ஒரு வட்டத்தை வரையும். இதன் காரணமாக அவரால் அதிகப்படியான சக்தியை உருவாக்க செய்ய முடிகிறது. இந்த இடத்தில் மிக முக்கியமாக அவரது மொத்த உடலும் நிலையாக இருக்கிறது.
அடுத்து இவ்வளவு பவரை உருவாக்கும் செய்து அடிக்கும் பொழுதும், அவருடைய ஷாட் தேர்வு மற்றும் ஷாட் கனெக்சன் மிகவும் துல்லியமாக இருக்கிறது. எங்கு அடிக்க வேண்டுமோ, அந்த இடத்திற்கு பிசிர் இல்லாமல் பந்தை அடிக்கிறார். இவ்வளவு பவரை கொடுக்கும் பொழுது, இவ்வளவு துல்லியம் வாய்ப்பில்லாத ஒன்று.
கடந்த ஐபிஎல் தொடரின் போது சுரேஷ் ரெய்னா மற்றும் பிரட் லீ இருவருமே ஜிதேஷ் சர்மாவின் இந்தத் திறமையைப் பற்றி நிறைய பேசியிருந்தார்கள். இந்திய அணியில் இவ்வளவு சீக்கிரத்தில் வாய்ப்பு பெற்றதற்கான காரணமும் இதுதான் என்று கூறி இருக்கிறார். ஜித்தேஷ் சர்மா விரைவில் ஒருநாள் அணியிலும் இடம்பெறுவார் என்று நம்பபடுகிறது.

Story first published: Saturday, December 2, 2023, 23:05 [IST]
Other articles published on Dec 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+