Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ஸ்மித் ஆதிக்கத்துக்கு முடிவு.. ஆண்டின் கடைசி நாளில் கட்டம் கட்டித் தூக்கிய கேன்!

துபாய் : டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி மாறி, மாறி முதல் இடத்தை பிடித்து வந்தனர்.

பிற பேட்ஸ்மேன்கள் அவர்களின் ஆதிக்கத்தை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தனர்.

தொடர்ந்து அவர்களை நெருங்கி வந்த கேன் வில்லியம்சன் 2020ஆம் ஆண்டின் முடிவில் அவர்கள் இருவரையும் முந்தி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகள்

டெஸ்ட் போட்டிகள்

தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இந்த மூன்று பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ள அணிகளும் டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இந்த போட்டிகளில் அவர்களின் செயல்பாடுகள் தரவரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோலி ஓய்வு

கோலி ஓய்வு

விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே பங்கேற்றார். அடுத்த மூன்று போட்டிகளில் அவர் விடுப்பில் இருப்பதால், இந்த ஆண்டின் கடைசி போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

ஸ்மித் ஏமாற்றம்

ஸ்மித் ஏமாற்றம்

ஆண்டின் கடைசி போட்டியில் பங்கேற்ற ஸ்டீவ் ஸ்மித் இரண்டு இன்னிங்க்ஸ்களில் 0 மற்றும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். மறுபுறம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் சிறப்பாக ஆடி 129 மற்றும் 21 ரன்கள் குவித்தார்.

அதிக புள்ளிகள்

அதிக புள்ளிகள்

இதை அடுத்து கேன் வில்லியம்சன் விராட் கோலியை விட 11 புள்ளிகள் அதிகம் பெற்றும், ஸ்டீவ் ஸ்மித்தை விட 13 புள்ளிகள் அதிகம் பெற்றும் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஆதிக்கத்துக்கு முடிவு

ஆதிக்கத்துக்கு முடிவு

2020ஆம் ஆண்டில் 313 நாட்கள் ஸ்டீவ் ஸ்மித்தும், 51 நாட்கள் விராட் கோலியும் முதல் இடத்தில் இருந்தனர். ஆனால், ஆண்டின் கடைசி நாளில் கேன் வில்லியம்சன் முதல் இடத்தை தட்டிப் பறித்து அவர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி இருக்கிறார்.

Story first published: Thursday, December 31, 2020, 14:47 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+