Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித்தின் சரிவுக்கு காரணம் என்ன? கபில்தேவ் சொன்ன கருத்து.. முடிவை நெருங்கும் ஜாம்பவான்கள்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வீரர்களே நான்கு சிறந்த வீரர்களில் விராட் கோலி ஒருவர் என்று கபில்தேவ் பாராட்டி இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.

இதில் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும். இந்த சூழலில் விராட் கோலி பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

border gavaskar trophy india vs australia test match vs

ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி வெறும் முதல் இன்னிங்ஸில் ஏழு ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் விராட் கோலி மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விராட் கோலிக்கு இந்த ஆண்டு பெரிய அளவு தனிப்பட்ட முறையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

2024 ஆம் ஆண்டு மொத்தமாக 21 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 611 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதமும், இரண்டு அரை சதமும் அடங்கும். மொத்தமாகவே விராட் கோலியின் சராசரி 22 என்று அளவில் இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலிகளின் செயல்பாடு குறித்து கபில்தேவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கபில்தேவ் இந்திய அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் சிறந்த வீரர்களில் விராட் கோலி ஒருவர். நமது நாட்டின் தலைசிறந்த டாப் 4 பேட்ஸ்மேன்களை நீங்கள் வரிசை படுத்தினால், அதில் விராட் கோலி இருப்பார். தற்போது விராட் கோலி கடின காலத்தை கடந்து வருகிறார் என்றால் அதிலிருந்து மீண்டு வர விராட் கோலியால் மட்டுமே முடியும்.

கோலி நினைத்தால் மிக விரைவாக மீண்டும் அவரால் கம்பக் கொடுக்க முடியும். தற்போது கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.இதன் மூலம் கேப்டன் பதவியில் இருப்பவர்களுக்கும் பணிச்சுமை ஏற்படும்.இதன் காரணமாக ஏற்றம் இறக்குங்கள் இருக்கத்தான் செய்யும்.நெருக்கடியான காலகட்டத்தில் ஒருவர் எப்படி செயல்படுகிறார் என்பது பொருட்டே அவரைப் பற்றி நாம் மதிப்பிட முடியும். நல்ல காலத்தில் ஒருவரை நாம் எப்படிப்பட்ட வீரர் என மதிப்பிட முடியாது எனவே ரோகித் ஷர்மா கேப்டனாக மீண்டு வருவார் என்றும் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 10, 2024, 16:12 [IST]
Other articles published on Dec 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+