இவரால தான் மொத்த டீமுக்கும் பிரச்சனை.. சீக்கிரம் தூக்கிருவோம்.. கேப்டன் கோலி அதிர வைக்கும் திட்டம்!

மும்பை : கேதார் ஜாதவ் இன்னும் சரியான பார்முக்கு வராததால், அவரை விரைவில் அணியில் இருந்து கேப்டன் கோலி நீக்குவார் என கூறப்படுகிறது.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் இன்னும் பலம் வாய்ந்ததாக மாறவில்லை. நான்காம் வரிசை பேட்ஸ்மேன் இடத்துக்கு இருந்த பிரச்சனை, தீர்ந்தாலும், லோயர் மிடில் ஆர்டர் இன்னும் பலம் பெறவில்லை.

நான்காம் வரிசை

நான்காம் வரிசை

2017 முதல் 2019 உலகக்கோப்பை வரை இந்திய ஒருநாள் அணியில் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சரியாக அமையவில்லை. உலகக்கோப்பை தொடருக்குப் பின் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தில் பேட்டிங் செய்யத் துவங்கி சிறப்பாக ஆடி வருகிறார்.

மிடில் ஆர்டர் திணறல்

மிடில் ஆர்டர் திணறல்

ஆனால், உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி அணியில் இல்லாத நிலையில் மிடில் 5, 6 மற்றும் ஏழாம் இடத்தில் பேட்டிங் மோசமாக மாறி உள்ளது. இந்தியா 4 விக்கெட்களை விரைவாக இழந்தால், அந்தப் போட்டியில் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் திணறுகிறது.

டாப் ஆர்டரை நம்பி இருக்கும் அணி

டாப் ஆர்டரை நம்பி இருக்கும் அணி

ஹர்திக் பண்டியாவும் காயம் காரணமாக நீண்ட காலமாக ஓய்வில் இருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்ய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

ஸ்ட்ரைக் ரேட் குறைவு

ஸ்ட்ரைக் ரேட் குறைவு

குறிப்பாக, மிடில் ஆர்டரில் கேதார் ஜாதவ் 2019 முதல் சொதப்பி வருகிறார். அவர் ரன் குவித்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளது தான் பிரச்சனையாக உள்ளது.

இந்தியாவின் ஸ்ட்ரைக் ரேட்

இந்தியாவின் ஸ்ட்ரைக் ரேட்

2019ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் ஆறாவது பேட்ஸ்மேன் மற்றும் அதற்கும் கீழே உள்ள வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் சராசரி 91.47 மட்டுமே. இதே விஷயத்தில் பாகிஸ்தான் - 104.95, ஆஸ்திரேலியா - 104.64, வெஸ்ட் இண்டீஸ் - 96.57, இங்கிலாந்து - 96.16, நியூசிலாந்து - 95.68 என இந்தியாவை விட முன்னணியில் உள்ளனர்.

ஜாதவ் ஸ்ட்ரைக் ரேட்

ஜாதவ் ஸ்ட்ரைக் ரேட்

இதே காலகட்டத்தில் கேதார் ஜாதவ்வின் ஸ்ட்ரைக் ரேட் 91.57 மட்டுமே. கடைசி இரண்டு - மூன்று ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்க்க வேண்டும் என்ற நிலை வரும் போது ஜாதவ் தடுமாறி வருகிறார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அவரது இந்த மோசமான பேட்டிங் உலகக்கோப்பை தொடரின் போது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சில போட்டிகளில் அவர் அரைசதம் அடித்தாலும் கூட, அவரது ஸ்ட்ரைக் ரேட் பற்றிய விமர்சனங்கள் எழுந்தது.

நீக்க வேண்டும்

நீக்க வேண்டும்

அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் உலகக்கோப்பை தொடருக்கு பின்பு இருந்தே தொடர்ந்தாலும், அவர் ஒருநாள் அணியில் மட்டும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். அதற்கு, காரணம், இந்திய அணியில் உள்ள ஆல்-ரவுண்டர் பற்றாக்குறை தான்.

ஹர்திக் பண்டியா வருகிறார்

ஹர்திக் பண்டியா வருகிறார்

ஹர்திக் பண்டியா காயத்தில் இருந்து மீண்டு வலைப்பயிற்சி செய்ய துவங்கி உள்ள நிலையில், அவரை நியூசிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்க கேப்டன் கோலி ஆர்வமாக இருக்கிறார்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

ஜாதவ் அதிகமாக பந்துவீசும் வாய்ப்பையும் பெறாத நிலையில், பண்டியா அணியில் சேர்ந்தால், ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஆட இருக்கும் அவர், அந்த தொடரில் தன்னை நிரூபித்தால் தொடர்ந்து வாய்ப்பு பெறலாம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs AUS : Kedar Jadhav may lose his spot in the team. Kohli planned to include Hardik Pandya in NZ series.
Story first published: Tuesday, January 14, 2020, 11:52 [IST]
Other articles published on Jan 14, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X