Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீம்ல என்ன வேலை கொடுத்தாலும் பிரிச்சு மேய்றாரே.. யாருய்யா இவரு? பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்!

Recommended Video

எல்லா இடத்திலும் அதிரடி... கே.எல். ராகுலை கொண்டாடும் ரசிகர்கள்

ராஜ்கோட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தன் பேட்டிங் வரிசையை மாற்றி ஆடிய ராகுல் ரன் குவித்து மிரட்டினார்.

அதே போல, ரிஷப் பண்ட்டுக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை செய்த அவர், அதிலும் ஜொலித்தார்.

துவக்க வீரர் ராகுல்

துவக்க வீரர் ராகுல்

ராகுல் மாற்று துவக்க வீரராக நீண்ட காலம் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்று சில வாய்ப்புக்களை பெற்று வந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் துவக்க வீரராக நிரூபித்தார்.

ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு

ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சிறந்த பார்மில் இருக்கும் ராகுலை ஆட வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த கேப்டன் கோலி, முதல் போட்டியில் ரோஹித் சர்மா, தவான் துவக்க வீரர்களாக அணியில் இருந்தாலும், மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்ய வைத்தார்.

இந்தியா படுதோல்வி

இந்தியா படுதோல்வி

முதல் ஒருநாள் போட்டியில் அணிக்காக மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்த ராகுல் 47 ரன்கள் எடுத்தார். எனினும், இந்திய அணி பேட்டிங் வரிசை மாற்றத்தால் தடுமாறி படு தோல்வி அடைந்தது.

மாற்று விக்கெட் கீப்பர்

மாற்று விக்கெட் கீப்பர்

மேலும், முதல் போட்டியில் பேட்டிங் செய்த போது ரிஷப் பண்ட் காயமடைந்ததால் பந்துவீச்சின் போது அவர் கீப்பிங் செய்ய வரவில்லை. அதனால், விக்கெட் கீப்பிங் பணியையும் ராகுலே மேற்கொண்டார். அதில் சிறப்பாகவும் செயல்பட்டார்.

திட்டத்தில் மாற்றம்

திட்டத்தில் மாற்றம்

முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், இரண்டாம் போட்டியில் பேட்டிங் வரிசையை சீரமைக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த முறையும், ராகுலின் பேட்டிங் வரிசை மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்த முறை ரோஹித், தவான் துவக்கம் அளிக்க, கோலி தன் மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்தார். ராகுல் நான்காம் வரிசையில் களமிறங்கினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

நான்காம் வரிசையில் இறங்கிய அவர் அதிரடியாக ரன் குவித்தார். 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். 3 சிக்ஸ், 6 ஃபோர் அடித்து அசத்தினார். அவரது ஆட்டத்தால் 50 ஓவர்களில் இந்திய அணி 340 ரன்களை எட்டியது.

1000 ரன்கள்

1000 ரன்கள்

தன் சிறப்பான ஆட்டத்தின் இடையே ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார் ராகுல். அதிலும் 27 இன்னிங்க்ஸில் 1000 ரன்களை எட்டி, இந்திய அளவில் விரைவாக 1000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றார்.

ஸ்டம்பிங் செய்தார்

ஸ்டம்பிங் செய்தார்

மேலும், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் விக்கெட்டை தன் ஸ்டம்பிங் மூலம் வீழ்த்தி அசத்தினார். பேட்டிங், கீப்பிங் என இரண்டிலும் அணிக்காக தன் நிலையை மாற்றிக் கொண்டு ஆடி சிறப்பாக செயல்பட்டார்.

எத்தனை மாற்றங்கள்?

எத்தனை மாற்றங்கள்?

கடந்த காலங்களையும் சேர்த்து கேஎல் ராகுல் இந்திய அணியில் துவக்க வீரராகவும், மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என பேட்டிங் வரிசையில் அனைத்து இடங்களிலும் ஆடிவிட்டார். அதே போல, பொதுவாக சர்வதேச போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்யாவிட்டாலும், அணிக்காக அந்த பணியை ஏற்று சிறப்பாக செய்தார்.

ரசிகர்கள் பாராட்டு

ராகுலின் இந்த அர்ப்பணிப்பு உணர்வை கண்டு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இப்படி ஒருவரைத் தான் இந்திய அணி தேடிக் கொண்டு இருந்தது எனவும், இவரை நிரந்தர விக்கெட் கீப்பராக நியமிக்க வேண்டும் எனவும் சிலர் கூறி உள்ளனர்.

Story first published: Friday, January 17, 2020, 20:33 [IST]
Other articles published on Jan 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+