Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இந்திய அணியின் 11 இடங்களிலும் ராகுலை விளையாட வைத்து விட்டார்கள்.. மெக்ராத் சாடல்

மும்பை: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் வியாழக்கிழமை அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் ராகுல் ஐந்தாவது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு முன்பு அக்சர் பட்டேலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ராகுல் ஆறாவது இடத்தில் தான் களமிறங்கினார்.

Glen McGrath

எனினும் 31 பந்துகளை எதிர் கொண்டு 38 ரன்கள் சேர்த்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலை, இந்திய அணி நிர்வாகம் இஷ்டத்திற்கு மாற்றுகிறார்கள் என்று கேட்டால், அவர் பேட்டிங் வரிசையில் உள்ள 11 இடத்திலும் விளையாடிவிட்டார். ஒவ்வொரு முறையும் சூழலுக்கு ஏற்ப அவரை மாற்றுகிறார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் அப்படி ஒரு பேட்ஸ்மேன் தன்னை மாற்றிக் கொள்வது கடினமாகிவிடும். எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்யும் வீரராக ராகுல் மாறிவிட்டார். கடினமான ஆடுகளத்தில் அவர் இந்தியாவுக்காக அதிக ரன்களை குவித்து வருகிறார். இதன் மூலம் அடிக்கடி பேட்டிங் வரிசையில் மாற்றினால் ஒரு வீரரின் நம்பிக்கை பாதிக்கப்படும்.

எனினும் இந்த சூழலை எல்லாம் அவர் ஏற்றுக்கொண்டு விளையாடுகிறார் என நினைக்கின்றேன். அவர் ஒரு விக்கெட் கீப்பராகவும் இருக்கிறார். இந்தியாவில் பன்முகத்திறன் வாய்ந்த வீரராக ராகுல் உள்ளார். இதேபோன்று ரோகித் சர்மா, விராட் கோலி குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகிறது.

அதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக அவர்கள் எந்த வித கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வில்லை. ஆனால் பெர்த் மைதானத்தில் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்தியாவை காட்டிலும் அது அதிகம் என்பதால் வீரர்கள் தடுமாறுவார்கள். எனவே இருவரின் பார்ம் குறித்தும் கவலைப்பட தேவையில்லை என மெக்ராத் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, October 21, 2025, 23:57 [IST]
Other articles published on Oct 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+