Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விக்கெட் கீப்பராக மாறிய அந்த வீரர்.. ரிஷப் பண்ட்டுக்கு என்ன ஆச்சு? களத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

Recommended Video

விக்கெட் கீப்பராக மாறிய ராகுல்.. ரிஷப் பண்ட்டுக்கு என்ன ஆச்சு?

மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.

அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்த திடீர் மாற்றத்தை கண்டு ரசிகர்கள் வியப்படைந்தனர். ஆஸ்திரேலியாவின் பேட்டிங் இன்னிங்க்ஸ் முடியும் வரை ரிஷப் பண்ட் ஆடுகளத்துக்குள் வரவில்லை.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் 74, ராகுல் 47 ரன்கள் குவித்தனர்.

ரிஷப் பண்ட் வந்தார்

ரிஷப் பண்ட் வந்தார்

அடுத்து வந்த கோலி 16, ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஏமாற்றினர். அப்போது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து அணியை கரை சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், அவர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஹெல்மட்டில் தாக்கியது

ஹெல்மட்டில் தாக்கியது

ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த போது பாட் கம்மின்ஸ் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பந்து அவரது ஹெல்மட்டில் அடித்த பின்னரே கேட்ச் பிடிக்கப்பட்டது. அதில் பண்ட்டுக்கு மூளை அழற்சி ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டது.

விக்கெட் கீப்பிங் யார்?

விக்கெட் கீப்பிங் யார்?

இதையடுத்து அவர், ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. இந்திய அணி பந்துவீசிய போது, ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.

பரபரப்பு

பரபரப்பு

ரிஷப் பண்ட்டுக்கு என்ன ஆனது என முதலில் தெரிவிக்கப்படாததால், ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யத் துவங்கிய போது ரசிகர்கள் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின், பிசிசிஐ இது குறித்து விளக்கம் அளித்தது.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ அளித்த விளக்கத்தில், ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த போது ஹெல்மட்டில் பந்து தாக்கிய போது மூளை அழற்சி ஏற்பட்டு இருப்பதாகவும், அவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் ஏமாற்றிய நிலையில், பந்துவீச்சிலும் ஏமாற்றியது. இந்தியா நிர்ணயித்த 256 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் மிக எளிதாக சேஸிங் செய்தனர்.

பின்தங்கிய இந்தியா

பின்தங்கிய இந்தியா

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா படுமோசமான தோல்வியை தழுவி 0 - 1 என பின்தங்கி உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை வெல்ல முடியும்.

Story first published: Tuesday, January 14, 2020, 20:53 [IST]
Other articles published on Jan 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+