Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பீட்டர்சன் மனைவியிடம் இதை கேட்டேன்.. என் இடத்தில் யாராக இருந்தாலும், அதை தான் செய்வார்கள்.. ராகுல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ராகுல் இங்கிலாந்து வீரரின் மனைவியுடன் பேசும்போது உங்கள் கணவரை என்னை பார்த்து செய்ய சொல்லுங்கள் என்று கூறி கிண்டல் அடித்து பேசியதாக கூறியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அண்மையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்த தொடர் குறித்து இந்திய வீரர் ராகுல், யூ டியூப் சேனலுக்கு பேசும் போது, இங்கிலாந்து ஜாம்பவான் பீட்டர்சன் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் குறித்து ஒரு விசயத்தை சொன்னார்.

KL Rahul

டெல்லி கேப்பிட்டல் அணிக்காக ராகுல் விளையாடிய போது பீட்டர்சன் அந்த அணியின் மென்டராக பணிபுரிந்தார். தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென்று பீட்டர்சன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். அப்போது இருவரும் சமூக வலைத்தளத்தில் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தனர்.

இது குறித்து நேர்காணலில் பேசிய ராகுல், "பீட்டர்சன் உடனான எனக்கு இருக்கும் நட்பு வித்தியாசமானது. அவர் உண்மையிலே சிறந்த வீரர். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வோம். அப்போது என்னுடைய மனைவி, பீட்டர்சன்னை ஏன் கலாய்த்து கொண்டே இருக்கிறீர்கள். அவர் நல்ல மனிதராக இருக்கின்றார் என்று சொன்னார்."

"அதற்கு நான் பதில் அளித்தேன். நான் சொல்வது மட்டும் தான் வெளியே வருகிறது. அவர் என்னை கிண்டல் செய்வதும் என்னிடம் சொல்லும் விஷயங்கள் எதுவும் சமூக வலைத்தளத்தில் வருவது கிடையாது. ஒருமுறை என்னை பீட்டர்சன் துரத்திக் கொண்டே வந்தார். அப்போது பீட்டர்சனின் மனைவியை நான் சந்தித்தபோது உங்கள் கணவரிடம் என்னை பார்த்து பத்திரமாக செய்யுங்கள்."

"என்னிடம் அவர் கடுமையாக நடந்து கொள்கிறார் எனக் கூறி கிண்டல் அடித்தேன். இதேபோன்று 2023 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 97 ரன்கள் அடித்தேன். அப்போது 200 ரன்கள் என்ற இலக்கை நாங்கள் எட்டும் போது வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ராகுல் சதம் அடிக்க முற்பட்டார். ஆனால் ராகுல் 97 ரன்கள் எடுத்திருந்தபோது அணி வெற்றி இலக்கை எட்டிவிட்டது."

"நான் அந்த பந்தை அடித்து விட்டு கொண்டாடவில்லை. ஏனென்றால் நான் ஏன் இவ்வளவு வேகமாக அந்த பந்தை அடித்தேன் என்று யோசித்தேன். பலரும் கூட அணி வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் நான் சுயநலமாக சதத்தை எண்ணிக் கொண்டிருந்தேன் என்று கமெண்ட் அடித்து இருந்தார்கள். உண்மைதான் அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கியம்."

" அதை நோக்கி தான் எல்லாரும் செல்கின்றோம். ஆனால் இது போன்ற கட்டத்தில் வெற்றி என்பது கண்டிப்பாக நடந்துவிடும் என்ற நேரத்தில் என் இடத்தில் எந்த ஒரு வீரர் இருந்தாலும், நாம் இவ்வளவு உழைத்திருக்கிறோம். அதற்கு சதம் கண்டிப்பாக தேவை என்று தான் நினைப்பார்கள். அதை தான் நானும் நினைத்தேன். நான் பவுண்டரி அடிக்க நினைத்தேன். ஆனால் அந்த பந்து சிக்ஸராக மாறிவிட்டது. யாருக்குத்தான் உலகக் கோப்பையில் சதம் அடிக்க வேண்டும் என்று நினைப்பு இருக்காது என ராகுல் கூறியுள்ளார். அந்த தொடரில் ராகுல் 10 இன்னிங்ஸில் 452 ரன்கள் அடித்து இருந்தார். இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும்.

Story first published: Tuesday, October 28, 2025, 23:48 [IST]
Other articles published on Oct 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+