Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?

மும்பை : இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை அணியில் இருந்து இனி ஒதுக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல அவர் முக்கிய காரணம் ஆவார்.

இந்த நிலையில், அவரை எப்படி அணியில் ஆட வைப்பது என்ற குழப்பத்தில் சிக்கப் போகிறார் கேப்டன் விராட் கோலி.

ரிஷப் பண்ட் செயல்பாடு

ரிஷப் பண்ட் செயல்பாடு

ரிஷப் பண்ட் கடந்த இரு ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 அணியில் மோசமாக ஆடி வந்தார். அவரது விக்கெட் கீப்பிங்கும் மோசமாக இருந்தது. இந்த நிலையில், அவரை டெஸ்ட் அணியில் மட்டுமே தக்க வைத்தது இந்திய அணி நிர்வாகம்.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 97 மற்றும் 89* ரன்கள் குவித்து இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். மேலும், இந்த தொடரில் இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்த வீரரும் அவரே.

விக்கெட் கீப்பர்?

விக்கெட் கீப்பர்?

இந்த நிலையில், அவரை அணியில் எப்படியும் தக்க வைத்தே ஆக வேண்டும். இப்படிப்பட்ட மேட்ச் வின்னர் ஒருவரை அணியை விட்டு நீக்கி வைக்க முடியாது என்ற குரல்கள் எழத் துவங்கி உள்ளன. ஆனால், அவரது விக்கெட் கீப்பிங் இந்த முறையும் மோசமாக இருந்தது.

முழு நேர பேட்ஸ்மேன்

முழு நேர பேட்ஸ்மேன்

எனவே, அவரை முழு நேர பேட்ஸ்மேன் ஆக டெஸ்ட் அணி மட்டுமின்றி அனைத்து வித அணிகளிலும் ஆட வைக்க கேப்டன் கோலி திட்டமிட வேண்டும் எனவும் சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே, அணியில் இடம் பிடிக்க பலர் காத்திருக்கும் நிலையில், கோலிக்கு சவாலை ஏற்படுத்தி இருக்கிறார் ரிஷப் பண்ட்.

Story first published: Thursday, January 21, 2021, 20:37 [IST]
Other articles published on Jan 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+