Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: கம்பீர் செய்தது அபத்தம்.. கேவலத்தின் உச்சம்.. முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சாடல்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் செய்த செயல் மிகவும் அபத்தமானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே ஹர்சித் ராணா விவகாரத்தில் ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்ததற்கு கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கம்பீரை விடாத ஸ்ரீகாந்த் மேலும் பல விமர்சனங்களை அடுக்கி இருக்கிறார். பெர்த் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது.

Gambhir

இதில் நடுவரிசையில் ராகுலுக்கு பதிலாக அக்ஸர் பட்டேல் விளையாடினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாக கேஎல் ராகுல் தான் விளையாட வேண்டும். ஆனால் நேற்று அவர்கள் செய்தது மிகவும் அபத்தமான முடிவு ராகுல் போன்ற ஒரு திறமையான வீரரை வைத்துக்கொண்டு வேறு எங்கேயோ வீரர்களை தேடுகிறார்கள்.

அதிக ரன்களை அவர் குவிப்பார். கே எல் ராகுலை விட அக்சர் பட்டேல் களத்திற்கு முன்பே சென்று விளையாடுவதெல்லாம். கேவலமான விஷயம் அக்சர் பட்டேல் 31 ரன்கள் அடித்தாலும், அவர் நன்றாக விளையாடினாரா இல்லையா என்பதெல்லாம் கேள்வியே கிடையாது. ராகுல் உங்கள் அணியில் இருக்கும் சிறந்த வீரர் அவர் ஐந்தாவது வீரராக களம் இறங்குகிறார்.

நான் கேப்டனாக இருந்தால் நிச்சயம் அவரை நான்காவது வீரராக விளையாட வைப்பேன். குறிப்பாக இந்தியாவில் உள்ள கால சூழ்நிலுக்கும், ஆஸ்திரேலியாவில் உள்ள கள சூழலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அளவிலான பந்துகளை எதிர் கொள்ள வேண்டும் என்றால் நான்காவது வீரராக அவர் விளையாட வேண்டும்.

ஒருவேலை ராகுல் முன்பே களத்திற்கு வந்திருந்தால் இந்திய அணி 160 ரன்கள் எடுத்திருக்கும். நாம் விக்கெட்டுகளையும் இழந்திருக்க மாட்டோம். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்பது கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். ஒருவேளை அது இந்தியாவுக்கு சாதகமாக மாறி இருக்கலாம். சொல்ல வேண்டுமென்றால் மழை பெய்து நம்மை பாதுகாத்தது.

இதேபோன்று நிதீஷ்குமாரை முன்பை அனுப்பாமல் வேறு வீரர்களை அனுப்புகிறார்கள் கேட்டால் வலது கை இடது கை பேட்ஸ்மேன்கள் தான் களத்தில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.

Story first published: Monday, October 20, 2025, 23:26 [IST]
Other articles published on Oct 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+