Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: சிவம் துபேவை அவமானப்படுத்த வேண்டாம்.. ஹர்சித் என்ன பெரிய வீரரா? ஸ்ரீகாந்த் சாடல்

துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது பல விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்திய அணி எட்டாவது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது ஆல்ரவுண்டரான சிவம் துபே தனது பேட்டிங்கிற்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று கம்பீர் ஹஷீத் ரானாவை களம் இறக்கினார். எனினும் ஹர்ஷித் ராணா 33 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மிட்டாலும், சிவம் துபேவுக்கு பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

Kris srikanth

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், கம்பீரின் இந்த முடிவை கடுமையாக சாடியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், நீங்கள் சிவம் துபேவின் திறமையை கேலி கூத்தாக இருக்கிறீர்கள். இதன் மூலம் சிவம் துபேவின் நம்பிக்கை உருகுலையும்.

ஹர்ஷித் ரானா என்றால் என்ன அவ்வளவு பெரிய வீரரா? 35 ரன்கள் அடித்தார். ஆனால் அது ஒன்றும் சிறப்பானது கிடையாது. கடினமாக போராடி தான் விளையாடினார். ஒரே ஒரு சிக்சர் அடித்தார். பிறகு ஒரு ஸ்கொயர் கட் ஆடினார். 33 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் சேர்ப்பது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது.

அவர் பல பந்துகளை வீணடித்து இருக்கிறார் என்று தான் அர்த்தம். அது மட்டுமல்லாமல் அபிஷேக் ஷர்மா பல பந்துகளை எதிர்கொள்ளாமல் எதிர்முனையில் நின்றதற்கு காரணமே ஹர்ஷித் ராணா சிங்கிள்ஸ் எடுக்க முடியாமல் தடுமாறியதுதான். ஒரு ஓவரின் கடைசி பந்தில் அதிக முறை ஹர்ஷித் ரானா சிங்கிள்ஸ் எடுத்தார்.

இந்த ஜோடி 47 பந்துகளை எதிர்கொண்டது. இதில் ஹர்ஷித்ராணா 33 பந்துகளையும் அபிஷேக் ஷர்மா 14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். இதன் காரணமாக அபிஷேக் சர்மாவுக்கு பெரிய அளவு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் அவருடைய ரன் சேர்க்கும் வேகம் பாதிக்கப்பட்டது. இதனால் என்ன பயன்?

ரசிகர்கள் வேண்டுமானால் அது 35 ரன்கள் என்று சொல்வார்கள். ஆனால் அந்த 35 ரன்கள் அணிக்காக ஏதேனும் மதிப்பை கூட்டி இருக்கிறதா? மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் மட்டும்தான் அவர் அடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் பேட்டிங்கில் தன்னை காப்பாற்றிக் கொண்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

இந்த முடிவை சூரியகுமார் தான் எடுத்திருப்பார்.கம்பீர் அதற்கான ஐடியாவை வழங்கி இருப்பார். இது யார் முடிவாக இருந்தாலும் இது நிச்சயம் மோசமான ஒரு முடிவு. சிவம் துபே ஒரு பேட்டரா? பௌலரா? இல்லை ஃபில்டரா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஒரு வீரரின் நம்பிக்கையை இப்படி சீர்குலைக்க கூடாது. சிவம் துபேவை இந்திய அணி நிர்வாகம் ஏதோ ஐபிஎல் பயன்படுத்தப்படும் இம்பேக்ட் வீரர் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியிருக்கின்றார்.

Story first published: Saturday, November 1, 2025, 18:56 [IST]
Other articles published on Nov 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+