Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS:ODI கிரிக்கெட்டில்ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 5 இந்திய வீரர்கள் யார்?

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் பும்ரா, முகமது சமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும் நிதிஷ்குமார் ரெட்டி என ஒரு ஆல் ரவுண்ட் வேகப்பந்துவீச்சாளர் உள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் யார் என்ற பட்டியலை தற்போது நாம் பார்க்கலாம். இதில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி.ஆஸ்திரேலிய மண்ணில் 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Ind vs Aus

இதில் அவருடைய எக்னாமி 4.27 என்ற அளவில் இருக்கின்றது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ரவி சாஸ்திரி இருக்கின்றார். சுழற் பந்துவீச்சாளரான ரவி சாஸ்திரி 28 போட்டிகள் விளையாடி 29 விக்கெட்டு வீழ்த்தி இருக்கிறார். இதில் அவருடைய சராசரி 3.61 என்ற அளவில் இருக்கின்றது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஸ்ரீநாத். இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் 31 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதில் அவருடைய எக்னாமி 4.45 என்ற அளவில் உள்ளது இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 30 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இர்பான் பதான், ஆஸ்திரேலிய மண்ணில் 24 ஒரு நாள் போட்டி விளையாடியுள்ள அவர் 33 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதில் அவருடைய எக்னாமி 5.48 என்ற அளவில் உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் கபில்தேவ் இருக்கின்றார்.இவர் 42 போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.கபில்தேவின் எக்னாமி வெறும் 3.34 என்று அளவிலே இருக்கிறது

Story first published: Saturday, October 18, 2025, 23:57 [IST]
Other articles published on Oct 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+