அடிலெய்ட் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெறும் என்று பலரும் கணித்திருந்தார்கள். ஆனால் அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கும் வகையில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்தார். புதிய அணியின் கேப்டனாக களமிறங்கிய பும்ரா எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் வாக், ஜெய்ஸ்வாலுக்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலர்கள் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பெர்த் டெஸ்ட் போட்டியில் பெரும்பான்மையாக நாம் சரியாகத்தான் பதிவு செய்தோம்.
ஆனால் ஆஸ்திரேலியா வீரர்களிடம் போதுமான ஆக்ரோஷம் இல்லை. இந்திய வீரர்களுக்கு எதிராக ஷார்ட் பால் வந்து பிச்சை அதிக அளவு ஆஸ்திரேலிய வீரர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். இதன் மூலம் இந்திய வீரர்களை நாம் தொந்தரவு செய்திருக்க முடியும். ஜெயஸ்வால் அபாரமான ஒரு வீரராக இருக்கிறார்.
அவருக்கு 22 வயது தான் ஆகிறது.
ஆனால் ஜெய்ஸ்வால் களத்தில் நெருக்கடி சந்திக்கும் வகையில் நாம் செயல்படவே இல்லை. சில சமயங்களில் மட்டும் தான் நாம் ஆக்ரோசமாக செயல்பட்டோம். ஆனால் பந்துவீச்சு, உடல் மொழி அனைத்துமே ஆஸ்திரேலிய வீரர்களிடம் குறைவாகவே இருந்தது. இது போன்ற பெரிய தொடர்பு முன்பு ஆஸ்திரேலியா வீரர்கள் சரியான முறையில் பயிற்சி எடுக்க வேண்டும்.
நான் எல்லாம் பழைய காலத்து கிரிக்கெட் வீரர். எங்கள் சமயத்தில் அனைத்துமே வித்தியாசமாக இருந்தது. நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடினோம். டெஸ்ட் போட்டிக்கு முன்பு கூட உள்ளூர் போட்டிகளில் விளையாடினோம். ஆனால் தற்போது அனைத்தும் மாறிவிட்டது. அட்டவணையில் நிறைய போட்டிகள் இருப்பது உண்மைதான். எனினும் இது போன்ற தொடருக்கு பயிற்சி எடுக்க வேண்டும். மார்னஸ் லாபஸ்சேன் பொறுத்தவரை அவர் கிரிக்கெட் குறித்து 24 மணி நேரமும் யோசிக்கிறார். அது ஒரு பிரச்சனை தான். லாபஸ்சேன் தன்னுடைய பேட்டிங் யுத்தியை சிறிதளவு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மார்க் வாக் கூறியுள்ளார்.