Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. முதுகில் குத்திய ஹைடன்.. சொந்த நாட்டு வீரர்களின் வீக்னஸை, இந்தியாவுக்கு போட்டு கொடுத்தார்-விவரம்

பிரிஸ்பேன் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை பிரிஸ்பேன் நகரில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஹைடன் தற்போது இந்திய அணி வெற்றி பெறுவதற்கான ஒரு ஐடியாவை சொல்லி இருக்கிறார்.

ind vs aus mathew hayden india vs australia vs

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி பந்து வீசும் போது நான்காவது மற்றும் ஐந்தாவது ஸ்டெம்ப்ட் லைனில் பந்து வீச வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஆடுகளம் வழங்கும் பவுன்சை இந்திய வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரிஸ்பென் டெஸ்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஜொலிக்க வேண்டுமென்றால் இந்த ஃபார்முலாவை கண்டிப்பாக உங்களின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்துங்கள்.

பிங்க் பந்தில் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும். அதில் அவர்கள் எளிதில் வென்று விட்டார்கள். ஆனால் சிவப்பு பந்து என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிநாதம் என்பதால் அது இது அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு நிச்சயம் இருக்கும். மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். நேரத்தையும் கடந்து இந்திய வீரர்கள் விளையாட வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் ஒரு நாட்களுக்கு மேல் விளையாட வேண்டும். ஒரு நாட்களுக்குள் ஆல் அவுட் ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. பேட்டிங் செய்யும்போது குறைந்தபட்சம் 350 ரன்கள் தாண்டி ரன்களை சேருங்கள். பந்துவீசுக்கு சாதகமான சூழல் இருந்தாலும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முயற்சி பண்ண வேண்டும்.

பிரிஸ்பேன் என்பது வித்தியாசமான போட்டியாக அமையும். இது ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் நடைபெறுகிறது என்றாலும் இந்திய அணி கடந்து முறை இங்கு சிறப்பான ஒரு வெற்றியை பெற்றது. அதன் நல்ல நினைவுகள் நிச்சயம் இந்திய வீரர்களுக்கு உதவும் என நம்புகிறேன் என்று மேத்தீவ் ஹைடன் கூறியிருக்கிறார்.

Story first published: Wednesday, December 11, 2024, 21:18 [IST]
Other articles published on Dec 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+