Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யோசிக்கவே மாட்டீங்களா? ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய தவறு செய்துவிட்டது.. மைக்கேல் கிளார்க் வார்னிங்

இந்தியாவிற்கு எதிரான நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் நேதன் மெக்ஸ்வீனியை நீக்கிய தேர்வாளர்களின் முடிவை ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மைக்கேல் கிளார்க் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். தொடக்க வீரராக அறிவிக்கப்பட்ட மெக்ஸ்வீனி, கடந்த 3 டெஸ்டுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்ததால், அவர் நீக்கப்பட்டு சாம் கொன்டாஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

மெக்ஸ்வீனி ஆறு இன்னிங்ஸ்களில் 10, 0, 39, 10, 9 மற்றும் 4 ஸ்கோர்களையும் சேர்த்தார். இருந்தபோதிலும் இளம் வீரருக்கு தேர்வாளர்கள் மேலும் வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும் என்று கிளார்க் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் "நேதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார். அதை நம்ப முடியவில்லை, தேர்வாளர்கள் தவறாக செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்."'

"38 வயதான உஸ்மான் கவாஜா இருக்கிறார், அதிக ஸ்கோர் எதுவும் எடுக்கவில்லை. அவர் ஒரு மூத்த வீரர்," மார்னஸ் லாபுஷேக்னே இருக்கிறார், தொடருக்கு முன்பு அழுத்தத்தில் இருந்தார், ஒரு நல்ல ஸ்கோர் மட்டுமே எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் ஒரு கடினமான சதம் அடித்தார், ஆனால் அவர் மீதும் அழுத்தம் இருந்தது. மெக்ஸ்வீனியைத் தவிர பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்கு மேல் இருக்கிறார்கள்.

கவாஜா ஓய்வு பெறும் வயதை எட்டியிருப்பதால் தொடக்க இடத்திற்கான ஆஸ்திரேலியாவின் எதிர்கால திட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். கவாஜா விரைவில் ஓய்வு பெற்றால் என்ன நடக்கும் மெக்ஸ்வீனி மீண்டும் வருவாரா, அல்லது பரிசீலிக்கப்பட மாட்டாரா இல்லை தவறு நடந்துவிட்டது' என்று அப்போது கூறுவார்களா கிளார்க் குறிப்பிட்டார். முன்னதாக சாம் கொன்டாஸ்க்கு கிளார்க் வாழ்த்து தெரிவித்தார். "அவர் அங்கு சென்று, தனது கனவை நனவாக்கி, அறிமுகத்தில் ஒரு சதம் அடிக்க வேண்டும் என்று நம்புகிறேன் என்று கிளார்க் கூறினார்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மிங்ஸ் (c), டிராவிஸ் ஹெட் (vc), ஸ்டீவ் ஸ்மித் (vc), சீன் அபாட்ட, ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷேக்னே, நேதன் லியான், மிட்செல் மார்ஷ், ஜீ ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்ச் மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Story first published: Friday, December 20, 2024, 15:53 [IST]
Other articles published on Dec 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+