Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது.. இவர் ஆஸி.வுக்கு கேப்டனா? டீமை விட்டே தூக்குங்க.. சிக்கலில் டிம் பெய்ன்!

சிட்னி : இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோற்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கடும் சிக்கலில் இருக்கிறார்.

அவரை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக தொடர வைத்துள்ளது தேர்வுக் குழு.

அதை சில ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் எதிர்த்து விமர்சனம் செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக முழு பலத்துடன் ஆடியது. சில பேட்ஸ்மேன்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும், வேகப் பந்துவீச்சு கூட்டணி முழு பலத்துடன் பங்கேற்றது. உலகிலேயே சிறந்த பந்துவீச்சு கூட்டணி என பெயர் பெற்ற வீரர்கள் இருந்தும் இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் வீழ்த்த முடியவில்லை.

சொதப்பல்

சொதப்பல்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் டிம் பெய்ன் போட்ட சில திட்டங்கள் தோல்வி அடைந்தன. சிட்னி டெஸ்ட் போட்டியிலும், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியிலும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சொதப்பலாக ஆடியது.

கேப்டன்சி தான் காரணம்

கேப்டன்சி தான் காரணம்

அதற்கு டிம் பெய்ன் கேப்டன்சி தான் காரணம் என பலரும் குற்றம் சுமத்தி இருந்தனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் டிம் பெய்ன் கேப்டனாக தொடர்ந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

அதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், தேர்வுக் குழு அணியில் எதுவுமே தவறாக நடக்கவில்லை என இருக்க முடியாது. டிம் பெய்ன் திட்டங்களிலும், கீப்பிங்கிலும் சொதப்பினார் என கூறி இருக்கிறார்.

Story first published: Thursday, January 28, 2021, 14:44 [IST]
Other articles published on Jan 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+