Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது போன மாசம்.. இது இந்த மாசம்.. இந்திய அணி பற்றி கூச்சமே இல்லாமல் மாற்றிப் பேசிய முன்னாள் வீரர்!

பிரிஸ்பேன் : இந்திய அணி பற்றி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பு வேறு மாதிரியாக பேசிய மைக்கேல் வாகன், இப்போது "உல்ட்டா"வாக இந்திய அணியை பாராட்டி வருகிறார்.

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தால் அதன் பின் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 4 - 0 என வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறி இருந்தார்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

ஆனால், நடந்ததோ வேறு. இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. தோல்வி அடைய வேண்டிய மூன்றாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. அடுத்து பெரும்பாலான அனுபவ வீரர்கள் காயத்தில் சிக்கிய நிலையில், இளம் வீரர்களை கொண்டு கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விட்டு வருகிறது.

பாராட்டு மழை

பாராட்டு மழை

இந்த நிலையில், இந்திய அணியின் போராட்ட குணத்தை கண்டு மைக்கேல் வாகன் பாராட்டு மழை பொழிந்து வருகிறார். ஆனால், பலரும் அவர் இந்திய அணி ஒரு போட்டியில் கூட ஜெயிக்காது எனக் கூறியதை சுட்டிக் காட்டி விளாசி வருகின்றனர்.

விராட் கோலி இல்லாமல்..

விராட் கோலி இல்லாமல்..

விராட் கோலி முதல் போட்டியில் மட்டுமே ஆடினார். அவர் இருந்தால் மட்டுமே இந்தியா ஜெயிக்கும். எனவே, முதல் போட்டியில் இந்தியா வென்றால் அடுத்த போட்டிகளில் அவர் இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்ற நோக்கில் அவர் விமர்சனம் செய்து இருந்தார்.

மூடி மறைத்தார்

மூடி மறைத்தார்

ஆனால், தற்போது இந்திய அணி பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா என ஒரு அனுபவ டெஸ்ட் அணி பந்துவீச்சாளர் கூட இல்லாமல் சிறப்பாக ஆடி வருகிறது. இந்த நிலையில், மைக்கேல் வாகன் தான் முன்பு சொன்னதை அப்படியே மூடி மறைத்து இந்திய அணியின் மாற்று வீரர்கள் கூட திறமையானவர்கள் என பாராட்டித் தள்ளி இருக்கிறார்.

Story first published: Sunday, January 17, 2021, 17:41 [IST]
Other articles published on Jan 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+