Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: டி20 தொடரை வெல்லப்போவது யார்? அதிக ரன்கள் அடிக்க போகும் வீரர் யார்? கிளார்க் கணிப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை புதன் கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் யார் அதிக ரன்கள் எடுக்கப் போகிறார்கள், எந்த அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மைக்கில் கிளார்க் கணித்தப்படியே ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது. இதனால் டி20 தொடரில் மைக்கேல் கிளார்க் என்ன கணிப்பை வெளியிடப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

Ind vs aus Micheal Clarke

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், என்னை கேட்டால் இந்திய அணியில் மூன்று ஃபார்மட்டிலும் அபிஷேக் ஷர்மா விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக அவர் தயாராகி விட்டார். ஆனால் அணியில் 11 வீரர்கள் மட்டும்தான் இருக்க முடியும்.அதில் ஆறு பேட்டர்கள் தான் விளையாடுவார்கள்.

இப்படி இருக்கும் போது அபிஷேக் ஷர்மா ஒரு சூப்பர் ஸ்டாராக டி20 கிரிக்கெட்டில் விளக்குகிறார். தொடக்க வீரராகவும், இடது கை பேட்ஸ்மேன் ஆகவும் பல்வேறு ஷாட்களை ஆடக்கூடிய வீரராகவும் அபிஷேக் ஷர்மா விளங்குகிறார். இதனால் இந்த தொடரில் அபிஷேக் ஷர்மா அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இதுவரை 24 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் ஷர்மா முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியை டி20 கிரிக்கெட்டில் எதிர்கொள்கிறார். இதேபோன்று அதிக விக்கெட் எடுக்கக்கூடிய வீரராக ஆட்டம் சம்பா இருப்பார் என்றும் மைக்கேல் கிளார்க் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இதுவரை 106 போட்டிகளில் விளையாடியுள்ள ஆடம் ஜம்பா 121 விக்கெடுகளை வீழ்த்திருக்கிறார். இதில் அவருடைய எக்னாமி 7.33 என்ற அளவில் இருக்கின்றது. இதேபோன்று ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெறும் என்றும் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இதில் ஒரு போட்டி மழை காரணமாக ரத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.கடந்த 2024 டி20 உலகக்கோப்பை அரை இறுதி போட்டிகள் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது. அதன் பிறகு 18 டி20 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்று பலமான அணியாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 28, 2025, 21:57 [IST]
Other articles published on Oct 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+