Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா வைத்த ஆப்பு.. மீண்டும் அறிமுக வீரருடன் வரும் கம்மின்ஸ்.. ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவிள்ள ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரர் வெப்ஸ்டர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை அதிகாலை தொடங்கவுள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது. இதனால் சிட்னி டெஸ்டை டிரா செய்தாலே, எளிதாக பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா அணியால் கைப்பற்ற முடியும்.

ind vs aus pat cummins beau webster vs


இதன் மூலமாக 10 ஆண்டுகளுக்கு பின் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று ஆஸ்திரேலியா அணி புதிய வரலாறு படைக்க முடியும். ஆஸ்திரேலியா அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. இதனால் ஆஷஸ் தொடருக்கு நிகரான கொண்டாட்டத்தை ஆஸ்திரேலியா அணி வீரர்கள் வெளிப்படுத்த காத்திருக்கின்றன்ர்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், மிட்சல் ஸ்டார்க் இந்த டெஸ்ட் போட்டியை தவறவிட வாய்ப்பே இல்லை. ஆனால் மிட்சல் மார்ஷ் இந்த டெஸ்டில் இருந்து பெஞ்ச் செய்யப்படுகிறார்.

அவர் நினைத்ததை போல் பெரிதாக ரன்களையோ, விக்கெட்டுகளையோ வீழ்த்தவில்லை. அதனால் மீண்டும் புத்துணர்ச்சியுடன் வருவதற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவரது இடத்தில் வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டிருக்கிறார். நிச்சயம் இது மிட்சல் மார்ஷ்-க்கு அவமானம் தான். ஆனால் வெப்ஸ்டர் தனது திறமையை காட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறி இருக்கிறார்.

மிட்சல் மார்ஷ் 4 போட்டிகளில் விளையாடி 70 ரன்களை மட்டுமே சேர்த்து, ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. கடந்த போட்டியில் கூட பும்ராவிடம் எளிதாக விக்கெட்டை பறி கொடுத்து சென்றார். அதேபோல் கடந்த ஷெஃபீல்டு ஷீல்டு சீசனில் 900 ரன்களும், 30 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர் வெப்ஸ்டர். சர் ஷெஃபீல்டு சோபர்ஸ்-க்கு பின் ஷீல்டு தொடரில் இப்படியொரு சாதனை படைத்தவர் வெப்ஸ்டர் மட்டும்தான்.

அதேபோல் கடந்த போட்டியில் கான்ஸ்டாஸ் மூலமாக இந்திய அணிக்கு ஆச்சரியம் கொடுத்ததை போல், இந்த ஆட்டத்தில் வெப்ஸ்டர் மூலமாக சர்ப்ரைஸ் கொடுக்க ஆஸ்திரேலியா அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த ஆட்டத்தை டிரா செய்தாலே ஆஸ்திரேலியா அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம்பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி விவரம்: உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, வெப்ஸ்டர், பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நேதன் லயன்

Story first published: Thursday, January 2, 2025, 8:25 [IST]
Other articles published on Jan 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+