Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ரசிகர்களுக்கு எவ்வளவு கடுப்பாக இருக்கும் என எனக்கு தெரியும்.. ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஷ் கருத்து

பெர்த்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 131 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி 21 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்சர் என மொத்தமாக 46 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இது குறித்து பேசிய அவர், இன்றைய ஆட்டத்தில் வானிலை மிகவும் முக்கிய பங்கு வகித்தது என்று கூறவேண்டும்.

Mitchell Marsh

முதலில் இங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இது போல் மழை நின்று நின்று பெய்தால் நிச்சயம் போட்டி தொடங்க முடியாமல் அது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை கொடுக்கும் என்று எனக்கு தெரியும். எனினும் இந்த போட்டியில் நாங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

சொந்த மண்ணில் வெற்றி பெறுவது எப்போதுமே நல்ல விஷயம் தான். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவது என்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். நாங்கள் ஷேஸ் செய்யும் போது பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் இரு அணிகளுக்குமே ஸ்விங் ஆகும் என்று எங்களுக்கு தெரியும்.

எனவே இங்கு விளையாடி ரன்கள் சேர்ப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான். எனினும் எங்கள் அணி வீரர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். களத்திற்கு வந்து பொறுப்புகளை எடுத்துக்கொண்டு வெற்றியை தேடி தந்திருக்கிறார்கள். குறிப்பாக ஜோஸ் பிலிப் தன்னுடைய அபார பந்துவீச்சு மூலம் அனைத்தையும் எளிதாக்கிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இன்றைய ஆட்டத்தை பல இளைஞர்கள் சிறுவர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். அவர்கள் முன் விளையாடி மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுபோன்று பெரிய பார்வையாளர்கள் மைதானத்திற்கு வருவதில்லை.ஆனால் இன்று அது நடந்திருக்கிறது. இந்த தருணத்தை நான் மகிழ்ச்சியுடன் எதிர் கொண்டேன் என்று மார்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணி நடப்பாண்டில் விளையாடிய எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது முதல் தோல்வியை தழுவி இருக்கிறது.

Story first published: Sunday, October 19, 2025, 22:57 [IST]
Other articles published on Oct 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+