Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: தொடரை நாங்க வென்றாலும், இந்தியா தான் நம்பர் 1 அணி.. கோலி, ரோகித் பின்னிட்டாங்க-ஆஸி.கேப்டன் மார்ஷ்

சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஒரு நாள் தொடரை மிட்செல் மார்ஷ் கைப்பற்றி இருக்கிறார். இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றியை பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஸ் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளாக விராட் கோலியும் ரோகித் சர்மாவும் எதிர் அணிகளை எவ்வாறு வீழ்த்தி இருக்கிறார்கள் என்று நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

Mitchell Marsh

நாங்கள் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது கீழ் வரிசையில் ஒரு பெரிய அமைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த தொடர் எங்கள் இளம் வீரர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்திருக்கிறது. இந்திய அணி மிகவும் சிறந்த அணியாக விளங்கினார்கள். எங்களுக்கு பல பாடத்தை நாங்கள் கற்றுக் கொண்டோம்.

உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா தான் விளங்குகிறது. எனவே அவர்களுக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றதை மிகவும் பெருமையான விஷயமாக நாங்கள் கருதுகிறோம். இந்த தொடர் மூலம் நாங்கள் கற்ற பாடத்தை மற்றும் உத்வேகத்தை வைத்துக்கொண்டு முன்னோக்கி தொடர்ந்து செல்வோம்.

எங்கள் அணியின் ஒட்டுமொத்த வீரர்களையும் நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். நாங்கள் ஒரு கட்டத்தில் 195 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தோம். இந்த அடித்தளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தியா தங்களது அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு பேட்டிங்களும் நன்றாக விளையாடினார்கள். எங்கள் அணியில் எலிஸ், ரீன்ஷா போன்ற வீரர்கள் நன்றாக விளையாடினார்கள் என்று மிட்செல் மார்ஸ் கூறினார்.

Story first published: Saturday, October 25, 2025, 17:08 [IST]
Other articles published on Oct 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+