For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படியா பண்ணுவாங்க? மானத்தை வாங்கிட்டீங்களே! தலையில் அடித்துக் கொண்ட ஆஸி. வீரரின் மனைவி!

Recommended Video

IND VS AUS 3RD ODI | Mitchell Starc wife reaction after his duck out

பெங்களூரு : ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐந்தாம் இடத்தில் பேட்டிங் ஆட அனுப்பப்பட்டார்.

எனினும், அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அதனால், ஆஸ்திரேலியாவின் அதிரடி திட்டம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலிஸா ஹீலி, தன் கணவர் டக் அவுட் ஆனதை குறிப்பிட்டு, ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டு இருக்கிறார். அதைக் கண்டு ரசிகர்கள் சிரித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் வார்னர், பின்ச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரன் ரேட் சிக்கல்

ரன் ரேட் சிக்கல்

அடுத்து ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லாபுஷாக்னே ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. லாபுஷாக்னே 54 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அப்போது ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய நிலையில் இருந்தது.

ஆரோன் பின்ச் திட்டம்

ஆரோன் பின்ச் திட்டம்

அதனால், வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை முன்னதாக களமிறக்க முடிவு செய்தார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச். ஸ்டார்க் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

ஸ்டார்க் டக் அவுட்

ஸ்டார்க் டக் அவுட்

அதிரடியாக அடித்து ஆட வேண்டும் என்ற திட்டத்தில் களமிறங்கிய அவர் ஜடேஜா ஓவரில் மூன்று பந்துகளை சந்தித்து, கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.

கேலியான பதிவு

ஆஸ்திரேலியாவின் அதிரடி திட்டம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், "ஆஸ்திரேலியாவின் புதிய ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் மிட்செல் ஸ்டார்க் டக் அவுட் ஆனார்" என்ற கேலியான பதிவை ட்விட்டரில் வெளியிட்டது போட்டியை ஒளிபரப்பிய ஃபாக்ஸ் கிரிக்கெட் நிறுவனம்.

ஸ்டார்க் மனைவி பதிவு

அதன் கீழே, மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலிஸா ஹீலி, ‘இப்படி மானத்தை வாங்கிட்டீங்களே" என்பது போல தலையில் அடித்துக் கொள்வது போன்ற ஈமோஜியை பதிவிட்டு இருந்தார்.

யார் இந்த அலிஸா ஹீலி?

யார் இந்த அலிஸா ஹீலி?

அலிஸா ஹீலி, ஆஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னணி வீராங்கனை ஆவார். மகளிர் அணியின் விக்கெட் கீப்பராக அவர் இருக்கிறார். சிறந்த டி20 வீராங்கனையாகவும் பல முறை விருது வென்று பாராட்டப்பட்டு உள்ளார்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

இந்த நிலையில், அவர் தன் கணவர் மிட்செல் ஸ்டார்க் பேட்டிங்கில் சொதப்பியதை கேலி செய்துள்ளதை ரசிகர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டுள்ளனர். சிலர் அவருக்கு பேட்டிங் கற்றுத் தர முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளனர். ஒருவர், நீங்கள் கற்றுக் கொடுத்ததை அவர் மறந்து விட்டார் என கிண்டல் செய்துள்ளார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 286 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி அந்த இலக்கை எளிதாக துரத்தி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரையும் 2 - 1 என கைப்பற்றியது.

Story first published: Monday, January 20, 2020, 13:14 [IST]
Other articles published on Jan 20, 2020
English summary
IND vs AUS : Mitchell Starc gone for a duck out in the third ODI and his wife Alyssa Healy reacts with a face palm.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+