Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிச்சு துவம்சம் பண்ணிட்டு வாங்க.. நம்பி அனுப்பிய கேப்டன்.. டக் அவுட் ஆன ஆஸி. வீரர்!

Recommended Video

IND VS AUS 3RD ODI | Mitchell Starc wife reaction after his duck out

பெங்களூரு : இந்தியாவுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 5வதாக களமிறங்கி டக் அவுட்டான மிட்செல் ஸ்டார்க்கை அவரது மனைவி டிவிட்டர் மூலம் கேலி செய்துள்ளார்.

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை சேஸ் செய்து இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி அதிக ரன்களை எடுக்க முனைப்பு காட்டிய நிலையில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்திருந்தது.

3வது ஒருநாள் போட்டி

3வது ஒருநாள் போட்டி

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3வது சர்வதேச ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வெற்றி கண்டு தொடரை கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம்

வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம்

மும்பை மற்றும் ராஜ்காட்டில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற வெற்றியை தீர்மானிக்கும் போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டின.

டாஸ் வென்று பேட்டிங்

டாஸ் வென்று பேட்டிங்

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களை அடிக்க மற்ற வீரர்கள் அதிகளவில் ரன்களை ஸ்கோர் செய்யாத நிலையில், ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் பின்ச் 5வதாக மிட்செல் ஸ்டார்க்கை களமிறக்கினார்.

டக் அவுட்டாகிய ஸ்டார்க்

டக் அவுட்டாகிய ஸ்டார்க்

இந்நிலையில் கேப்டனின் நம்பிக்கையை பொய்யாக்கி 3 பந்துகளை மட்டுமே அடித்து டக் அவுட்டாகி பெவிலியனுக்கு மிட்செல் ஸ்டார்க் திரும்பினார்.

கேலி பேசிய மனைவி

மிட்செல் ஸ்டார்க் டக் அவுட்டானதை பாக்ஸ் கிரிக்கெட் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தது. இதையடுத்து ஸ்டார்க்கின் மனைவியும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான அலிஸா ஹீலி, தன்னுடைய டிவிட்டர் அக்கவுண்டில் தலையில் அடித்துக்கொள்ளும் எமோஜியை போட்டு, அவரை கேலி செய்தார்.

கிரிக்கெட் சொல்லிக் கொடுக்க கோரிக்கை

அலிஸா ஹீலியின் இந்த எமோஜியை அடுத்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை போட, டிவிட்டர் பக்கமே பரபரப்புக்குள்ளாகியது. ஸ்டார்க்கிற்கு கிரிக்கெட் விளையாட சொல்லித் தருமாறு ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

Story first published: Monday, January 20, 2020, 14:58 [IST]
Other articles published on Jan 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+