பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சுப்மன் கில்லுக்கு காத்துக் கொண்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் குல்தீப் கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வழியுறுத்தியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையினான முதல் ஒருநாள் போட்டி பெர்த் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப், சுப்மன் கில்லுக்கு உண்மையான பரிட்சையை இப்போதுதான் காத்துக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் அவருடைய அணியில் பும்ரா மற்றும் சமி என யாருமே இல்லை. இப்படி இருக்கும்போது குல்தீப் அணியில் இல்லை என்றால் அது நிச்சயம் மிகப்பெரிய தவறாக இருக்கும். டிராவிஸ் ஹெட், ஸ்டார்க் ஆகியோர் பும்ரா சமி ஆகியோரை பார்த்து பயப்படுவார்கள். அப்படி மூன்றாவது ஒரு வீரரை பார்த்து பயப்படுவார்கள் என்றால் அது குல்தீப்பாக தான் இருக்கும்.
எனவே அவரை ஆஸ்திரேலியா வரை அழைத்துச் சென்று அணியில் சேர்க்காமல் இருந்தால் அதை விட ஒரு பெரிய தவறு வேறு எதுவும் இருக்காது. எனவே கில்லுக்கு இது ஒரு நல்ல பரிட்சையாக இது இருக்கும். அவர் தற்காப்பு கேப்டனா இல்லை ஆக்ரோஷமான கேப்டனா என்பது தெரிந்துவிடும். நம்பர் எட்டாவது வீரர் வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் குல்தீப் யாதவை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
நிதிஷ் குமார் ரெட்டியை நீங்கள் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்துங்கள். குல்தீப் தன்னுடைய பந்துவீச்சு திறனை ஏற்கனவே நிரூபித்து இருக்கின்றார். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் அவருடைய பந்துவீச்சு முறை மிகவும் ஏற்ற வகையில் இருக்கும் எனவே வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேலை விட குல்தீப் ஒரு நல்ல பவுலராக இருப்பார்.
குல்தீப் ஏற்கனவே டெஸ்ட், டி20 என இரண்டிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அப்படி இருக்கும் போது பும்ரா, சமி இல்லாத நிலையில் குல்தீப் யாதவை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். தற்போது ஒரு நாள் போட்டியில் நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் வித்தியாசமாக இருக்கின்றது. ரோகித் சர்மாவையும், கோலியையும் நல்ல முறையில் நடத்துகிறார்களா என்று கேட்டால் இல்லை.
இந்த இரண்டு வீரர்களின் எதிர்காலமும் சரியாகத் தெரியவில்லை. இந்த தருணத்தில் இருவரும் ரன் பசியுடன் இருப்பார்கள். இதே போல் இளம் வீரர்களும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பார்கள் இந்த தருணத்தில் நாங்கள் இன்னும் திறமையோடு தான் இருக்கின்றோம் என்பதை காட்ட அவர்கள் விரும்புவார்கள் என்று முகமது கைஃப் கூறியுள்ளார்.