Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முகமது ஷமியை இனி மறந்துடுங்க! பிசிசிஐ எடுத்த முடிவு.. அஸ்வின் வழியை தேர்ந்து எடுப்பாரா?

மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சமி பங்கேற்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது பேரிடியான ஒரு செய்தி வந்து இறங்கி இருக்கிறது. அதன்படி உடல் தகுதியை நிரூபிப்பதற்காக சமி தொடர்ந்து ரஞ்சி,சையது முஸ்தாக் அலி டி20 போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்த நிலையில் சமிக்கு முட்டி காலில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் சமியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள மருத்துவர்கள் அனுமதி அளிக்கவில்லை.

mohammed shami india vs australia champions trophy 2025

இந்த சூழலில் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடர்கான பெங்கால் அணியில் சமி முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெங்கால் அணி, டெல்லி அணிக்கு எதிராக தங்களுடைய முதல் ஆட்டத்தை ஹைதராபாத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியில் சமி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

இதன் காரணமாக சமி காயம் அதிகமாகாமல் இருப்பதற்காக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது என தெரிகிறது. இதனால் சமி திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல மாட்டார் என்றும் இனி அடுத்த இலக்காக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தான் ஷமி தயார் ஆவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவில் கருத்து தெரிவித்த கேப்டன் ரோகித் சர்மா, ஷமி பற்றி தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள மருத்துவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். சமி எப்போது வருவார் என்று எனக்கு இன்னும் தகவல் வரவில்லை. அவருடைய உடல் தகுதி 100% எட்டி இருந்தால் நிச்சயம் அவர் அனைத்து திரும்புவார்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டு போட்டியில் பங்கேற்கும் போது காயம் ஏற்பட்டு அவர் பாதியில் விலகினார். அது நிச்சயம் பெறும் பின்னடைவு ஏற்படுத்தும். இதன் காரணமாகத்தான் சமியை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என ரோகித் சர்மா விளக்கம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் சமி இனி ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தான் திரும்புவார் என தெரிகிறது. அதில் அவர் சிறப்பாக செயல்பட்டால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம் பெற கூடும். இல்லை காயம் சரியாகாமல் திரும்பத் திரும்ப வந்தால் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவும் வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Friday, December 20, 2024, 12:28 [IST]
Other articles published on Dec 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+