Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தந்தை சொன்ன வார்த்தை.. தேசிய கீதத்தின் போது கண்ணீர் விட்ட சிராஜ்.. நெகிழ வைத்த தருணம்!

சிட்னி : இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சிட்னி டெஸ்ட் போட்டி துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கபட்ட போது கண்ணீர் விட்டார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு இந்த டெஸ்ட் தொடர் மிகவும் நெகிழ்ச்சியான தருணம் ஆகும்.

ஆம், அவரது தந்தை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இறந்து விட்டார்.

தந்தை இறப்பு

தந்தை இறப்பு

முகமது சிராஜின் தந்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே இறந்தார். சிராஜ் டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்டு அணியுடன் ஆஸ்திரேலியாவில் தங்கி இருந்தார். அவர் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்றால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது என்ற நிலை இருந்தது.

அந்த முடிவு

அந்த முடிவு

அப்போது சிராஜ் தன் தந்தையின் கனவை நிறைவேற்ற ஆஸ்திரேலியாவிலேயே இருக்க முடிவு செய்தார். அவரது தந்தை நாட்டுக்காக கிரிக்கெட் ஆட வேண்டும் என பல முறை அவரிடம் கூறி இருந்தார். தன் தந்தையின் கனவை நிறைவேற்ற அவரது இறுதிச் சடங்கில் கூட பங்கேற்காமல் இருந்தார் சிராஜ்.

வாய்ப்பு

வாய்ப்பு

அந்த கடினமான முடிவை அவர் எடுத்ததற்கு டெஸ்ட் தொடரின் போது பலன் கிடைத்தது. காயமடைந்த ஷமிக்கு பதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் வாய்ப்பு பெற்றார். அந்த டெஸ்டில் அவர் கட்டுக் கோப்பாக பந்து வீசியது கவனம் ஈர்த்தது.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

அதன் பின் சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்றார். அந்த போட்டி துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவர் கண் கலங்கினார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டையும் சிராஜ் தான் கைப்பற்றினார். டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி அவர் அசத்தினார்.

Story first published: Thursday, January 7, 2021, 11:28 [IST]
Other articles published on Jan 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+